»   »  இங்கே ஆள் கிடைக்காததால் ஹிந்தியில் ஹீரோயின் தேடும் சிரஞ்சீவி!

இங்கே ஆள் கிடைக்காததால் ஹிந்தியில் ஹீரோயின் தேடும் சிரஞ்சீவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இடையில் கொஞ்ச நாள் சினிமாவை விட்டு விலகி அரசியல்ல கவனம் செலுத்துனா நம்ம ரேஞ்சையே மறந்துடறாங்க... இப்படித்தான் யோசித்துக்கொண்டிருப்பார் சிரஞ்சீவி.

நம்ம தமிழில் விஜய் நடித்து ஏஆர்.முருகதாஸ் இயக்கி சூப்பர் ஹிட் அடித்த கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக்கி நடிக்கிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. சில ஆண்டுகள் அரசியல் வாழ்க்கைக்காக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த சிரஞ்சீவி மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Chiranjeevi searching his pair in Bollywood

ஆனால் இன்னமும் படத்துக்கு ஹீரோயின் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். முதலில் நயன்தாராவைத் தான் அணுகினார்கள். அவர் முடியாது என சொல்லிவிட்டார். அனுஷ்கா, காஜல் என மாறி மாறி நடிகைகளிடம் இருந்து மறுப்பே வர ஹிந்தி பக்கம் தேடுதல் வேட்டை நடக்கிறது.

தீபிகா படுகோனே, நர்கிஸ் ஃபக்ரி என பாலிவுட் ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அடடா... சிரஞ்சீவிக்கு வந்த நிலைமை?

English summary
Actor Chiranjeevi is searching his heroine from Bollywood for his next movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil