போடுடா விசில...சியான் விக்ரமை சந்தித்த நம்ம தல... தீயாய் பரவும் போட்டோ
சென்னை : தலைப்பில் தல என்றதும் அஜித் என நினைத்து விட்டீர்களா. அது தான் இல்லை. சியான் விக்ரமை சந்தித்தது இந்திய கிரிக்கெட் வீரரும் ரசிகர்களால் அன்பாக தல என அழைக்கப்படுபவருமான மகேந்திர சிங் தோனி தான். இந்த போட்டோ தான் தற்போது தீயாய் பரவி வருகிறது.
ஐபிஎல்., கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் விளையாட துவங்கியது முதலே தமிழகத்தில் தோனிக்கு நிறைய ரசிகர்கள் உருவாகி விட்டனர். தோனியும் அடிக்கடி தமிழில் பேசுவது, தமிழ் பாடல்களுக்கு ஆடுவது, பாடுவது, தமிழ் நடிகர்களை சந்திப்பது என ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

விஜய்யுடன் சந்திப்பு
கடந்த ஆண்டு கோகுலம் ஸ்டூடியோசில் விஜய்யின் மாஸ்டர் பட ஷுட்டிங் நடந்த போது ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற தோனி, விஜய்யை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டார். விஜய் மற்றும் நெல்சன் திலீப்குமாருடன் தோனி எடுத்துக் கொண்ட போட்டோவை சோஷியல் மீடியாவை பகிர்ந்ததும், டைரக்டர் விக்னேஷ் சிவன் அதை பார்த்து விட்டு, ஒரு வார்த்தை கூட சொல்லலியே என வருத்தப்பட்டார்.

சியான் – தல சந்திப்பு
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஏலம், வீரர்கள் தேர்வு பற்றி ஆலோசனை நடத்த தோனி தற்போது சென்னையில் தான் இருந்து வருகிறார். தோனி சென்னையில் இருப்பது தெரிந்ததும் விக்ரம் சென்று அவதர சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது விக்ரம் சாதாரணமான கருப்பு டி-ஷர்ட் - ப்ளூ ஜீன்ஸில் வந்துள்ளார். தோனி வழக்கம் போல் கோட்-ஷுட்டில் இருந்துள்ளார்.

சந்தோஷத்தில் ரசிகர்கள்
விஜய்யை தொடர்ந்து விக்ரமையும் தோனி சந்தித்துள்ளது இருவரின் ரசிகர்களிடமும் ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் சந்தித்த போட்டோவை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

விக்ரமின் மகான் டீசர்
விக்ரம் நடித்துள்ள மகான் படம் பிப்ரவரி 10 ம் தேதி ஓடிடி.,யில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அசத்தல் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது. இதை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில் நம்ம தல தோனியை சந்தித்த போட்டோ வெளிவந்தால் சும்மாவா விடுவார்கள். அஜித் தன்னை தல என அழைக்க வேண்டாம் என சொல்லி விட்டதால், தற்போதிருக்கும் ஒரே தல தோனி தான்.


Click it and Unblock the Notifications











