»   »  விஜய்யை மிஞ்சும் விஷால்!

விஜய்யை மிஞ்சும் விஷால்!

Subscribe to Oneindia Tamil

பொங்கலுக்கு வந்த படங்களிலில் விஜய்யின் போக்கிரி தான் வசூலில் முதலிடத்தில்உள்ளது. ஆழ்வார் அடுத்த இடத்தில் உள்ளார். ஆனால் விஷாலின் தாமிபரணிவிரைவில் முதலிடத்தை பிடித்துவிடும் என்கிறார்கள்.

இந்தப் பொங்களுக்கு விஜய், அஜீத், விஷாலின் படங்கள்தான் ரேஸில் குதித்தன.மூன்று படங்களுமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்கள். அதிலும்அஜீத்தின் ஆழ்வார் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தன.வரலாறு பெரிய வெற்றியைப் பெற்றதே இதற்குக் காரணம்.

அதேபோல ஆதி சரியாக போகாமல் அடி வாங்கியதால், போக்கிரி மூலம்ரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுக்க விஜய்யும் தீவிரமாக இருந்தார். இப்படத்திற்காக அதிகநாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். பிரபு தேவாவின் இயக்கத்தில் முதல் தமிழ்ப்படம் என்பதால் போக்கி> குறித்த கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.

இதேபோல தொடர்ந்து வெற்றிப் படங்களையே கொடுத்து வரும் விஷால்,தாமிரபரணியை பெ>தும் எதிர்பார்த்திருந்தார். இந்தப் படங்களின் பாடல்கள்ஏற்கனவே ஹிட் ஆகி விட்டதால் படமும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும்கூடவே இருந்தது.

இப்போதைய நிலையில், மூன்று படங்களிலும் போக்கிரிதான் முன்னணியில் உள்ளது.ஆழ்வார் இரண்டாவது இடத்திலும் தாமிரபரணி 3வது இடத்திலும் உள்ளன.

இது படங்களின் விற்பனை மற்றும் தியேட்டர் கலெக்ஷனை வைத்து போடப்படும்கணக்கு.

ஆனால் லாபத்தின் அடிப்படையில் பார்த்தால் விஜய் படத்தை விட விஷாலின்படம்தான் வினியோகஸ்தர்களுக்கு பெரும் திருப்தியைக் கொடுத்துள்ளதாம்.

போக்கிரி படம் ரூ. 16 கோடிக்கு விற்பனையானது. இப்படத்தின் முதல் வாரகலெக்ஷன் ரூ. 6.5 கோடி என்கிறார்கள். அதேபோல அஜீத் படம் ரூ. 13 கோடிக்குவிற்றது. ஆனால் முதல் வார வசூலோ ரூ. 4.5 கோடிதானாம்.

விஷாலின் படம் ரூ. 7 கோடிக்கு போனது. ஆனால் முதல் வாரத்திலேயே 4 கோடியைஅள்ளி விட்டது தாமிரபரணி.

இதனால் போட்ட முதலை இரண்டே வாரத்தில் எடுத்துவிட்டு அடுத்து லாபத்தைசுருட்டப் போகிறார்களாம் வினியோகஸ்தர்கள். இந்தப் படம் பெரும் லாபத்தைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போக்கிரியை தாமிரபரணி வசூல் ரீதியில் வீழ்த்தினாலும்ஆச்சரியமில்லையாம். அதேசமயம் ஆழ்வார் காலை வாரி விட்டு விட்டாதாகவேபேச்சு உள்ளது. காரணம், தியேட்டர்களில் இந்தப் படத்துக்கு குறைய ஆரம்பித்துள்ளகூட்டம் தான்.

போக்கிரி, ஆழ்வார் ஆகிய இரு படங்களின் கதையும் ரசிகர்களைத் தவிர்த்து பொதுஜனங்களை அதிகம் கவரவில்லையாம். இதனால் ரசிகர்கள் படம் பார்த்து முடித்தபின்னர், வரும் வாரங்களில் வசூல் அடி வாங்கும் என்கிறார்கள்.

அதேசமயம், தாமிரபரணிக்கு அனைத்துத் தரப்பு ரசிகர்களும் அலை மோதஆரம்பித்துள்ளனர். குறிப்பாக விஷாலுக்கு பெண் ரசிகைகள் அதிகமாகிவிட்டனர்.இதனால் பெண்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.

எனவே இப்படம்தான் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெறும்என்கின்றனர்.

விஜய் படம் வழக்கமாக போட்ட முதல் வாரத்திலேயே பாதிப் பணத்தை அள்ளிவிடும். ஆனால் தற்போது தியேட்டர்களில் கட்டணங்களைக் குறைத்து விட்டதால்வசூல் அடி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தாமிரபரணி மூலம் தொடர்ந்து 3 வெற்றிப் படங்களைத் தந்து தானும் ஒரு வசூல்ஸ்டார் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் கருப்பு மச்சான் விஷால்.இதனால் அடுத்து விஷால் படங்களின் விலை கணிசமாக எகிறும் என்றும்கூறுகிறார்கள்.

கோலிவுட்டுல பூராமே கோடி தாம்பு...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil