»   »  கொம்பு சீவும் சிம்பு –சந்தானம்!

கொம்பு சீவும் சிம்பு –சந்தானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை திரை உலகில் அறிமுகப்படுத்திய சிம்புவுடன் நடிகர் சந்தானம் மோதப் போகிறாரா? கோலிவுட்டில் தற்போது எல்லோர் மனதிலும் ஓடிகொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி இதுதான்.

விஷயம் இது தான் சந்தானம் நடித்த இனிமே இப்படித் தான் படம் ஜூன் மாதம் 12 ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதே தேதியில் சிம்புவின் வாலு படமும் ரிலீஸ் செய்யப் போகிறார்கள்.

பல வெளியீட்டுத் தேதிகளை பார்த்து விட்ட வாலு படம் தற்போது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரின் பெரும் முயற்சியால் வெளிவர இருக்கிறது. இந்த முறை கண்டிப்பாக படத்தைத் திரைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் வாலு தரப்பினர் உறுதியாக இருக்கிறார்கள்.

சந்தானத்திற்கு வாழ்க்கை கொடுத்த சிம்பு

சந்தானத்திற்கு வாழ்க்கை கொடுத்த சிம்பு

மன்மதன் என்ற படம் மூலம் நடிகர் சிம்புவால் அறிமுகம் செய்யப் பட்டவர் காமெடி நடிகர் சந்தானம்.இன்று தமிழ் திரை உலகில் பரபரப்பான காமெடியனாக, நடிகராக,தயாரிப்பாளராக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து விட்டார்.

சிம்புவிற்கு இது வனவாசம்

சிம்புவிற்கு இது வனவாசம்

தனது அப்பாவின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிம்பு நல்ல நடிகராக அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இளம் வயதிலேயே இரண்டு படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

பன்முகத் திறமை

பன்முகத் திறமை

பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறைமைகளை கொண்டிருந்த சிம்பு மீது யார் கண் பட்டதோ இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் அவர் நடித்த எந்தப் படங்களும் ரிலீஸ் ஆகாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்.

வாலு- இனிமே இப்படித்தான்

வாலு- இனிமே இப்படித்தான்

ஜூன் 12 அன்று இனிமே இப்படித்தான் படம் ரிலீஸ் செய்யப் பட உள்ள நிலையில் பெரும் முயற்சிக்குப் பின் வாலு படத்தை அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்து இருக்கிறார் டி.ராஜேந்தர்.

ஒரு வாரம் தள்ளி செய்யலாமே

ஒரு வாரம் தள்ளி செய்யலாமே

இரு படங்களில் ஒரு படத்தை ஒரு வாரம் கழித்து ரிலீஸ் செய்யுங்கள் என்று இரு தரப்பினருக்கும் நெருங்கியவர்கள் சொல்லி வருகிறார்கள்.

போட்டியில் பின்வாங்க விரும்பவில்லை

போட்டியில் பின்வாங்க விரும்பவில்லை

நீண்ட வருடம் கழித்து வாலு ரிலீஸ் ஆவதால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் சிம்பு இருக்கிறார்.அதே போல சந்தானமும் போட்டியில் இருந்து பின்வாங்க விரும்பவில்லை.

சந்தானத்தின் முடிவென்ன

சந்தானத்தின் முடிவென்ன

சந்தானம் விட்டுக் கொடுப்பாரா அல்லது இப்போது இருக்கும் சூழ்நிலையில் சிம்பு போட்டி வேண்டாம் என்று பின்வாங்குவாரா முடிவு இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

சந்தானத்துக்கு பிரச்சினை இல்ல ஏன்னா ரெண்டு படத்திலயுமே அவர் இருக்காரு ஆனா சிம்பு?

English summary
Santhanam’s inimey and Simbu inimey ippadithaan’s Vaalu are set for a box office clash next month on june 12. Inimey ippadithaan and Vaalu are slated for the release on the same day i.e. on june 12 2015.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil