»   »  அஜீத்துக்கு கருணாநிதி வாழ்த்து

அஜீத்துக்கு கருணாநிதி வாழ்த்து

Subscribe to Oneindia Tamil
Ajith with Karunanidhi
தந்தையாகியுள்ள நடிகர் அஜீத்துக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினிக்கு 2 நாட்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

இந் நிலையில் அஜீத், நேற்று (வெள்ளிக்கிழமை) முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.

சுமார் கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது அஜீத், ஷாலினி, குழந்தைக்கு தனது ஆசிகளை வழங்கினார் கருணாநிதி.

இந்த சந்திப்பின்போது தனது பில்லா படத்தை பார்க்க வருமாறும், வசதிப்படும் நாளை கூறினால் அன்றைய தினம் படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்வதாகவும் அஜீத், முதல்வரிடம் தெரிவித்தார். அதை ஏற்ற முதல்வர் கருணாநிதி, எந்த நாள் சவுகரியமாக இருக்கும் என்பதை சொல்லி அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்.

குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் அஜீத், தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். ஐங்கரண் பிலிம்ஸ் தயாரிப்பில், ராஜு சுந்தரம் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்காக தற்போது தாடி வளர்க்கவும் ஆரம்பித்துள்ளார் அஜீத்.

ஷாலினியுடனும், குழந்தையுடனும் இரு வாரங்களை கழித்த பின்னர் ராஜு சுந்தரம் படத்தில் நடிக்க வருகிறார் அஜீத்.

தன் மனைவிக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்த நிகழ்வை அஜீத் தனது குட்டி வீடியோ கேமராவில் பதிவு செய்து வைத்துள்ளாராம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil