For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹீரோக்களாக களமிறங்கும் காமெடி நடிகர்கள்.. ஒரு முடிவோடத்தான் கிளம்பிட்டாங்க போல!

  By Shankar
  |

  முன்பெல்லாம் ஹீரோவாக வர, முதலில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று ஒரு ரூட் வைத்திருந்தார்கள். அதைப் போட்டுக் கொடுத்தவர் சாட்சாத் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அந்த வழியைப் பின்பற்றிதான் பலரும் ஹீரோவானார்கள்.

  இப்போது இதில் ஒரு மாற்றம். காமெடியனாக வந்து, கொஞ்சம் பரபரப்பாக புகழ் பெற்றதும் ஹீரோவாகிவிடுவது என்பது இன்னொரு ரூட்.

  அதிலும் இப்போது கோடம்பாக்கத்தில் திடீரென்று அத்தனை காமெடி நடிகர்களும் ஹீரோவாகக் கிளம்பிவிட்டார்களோ என்ற தோற்றம்...

  ஹீரோக்களோடு நடித்தாலும், நமக்குத்தான் பார்வையாளர்களின் அதிக கைத்தட்டல் கிடைக்கிறது என்பதால், காமெடியன்களுக்கு இந்த ஆசை போலிருக்கிறது.

  கவுண்டமணி

  கவுண்டமணி

  நகைச்சுவை நடிகர் என்று சொல்லப்பட்டாலும், கவுண்டமணி எப்போதோ ஹீரோவாகிவிட்டவர். மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா படங்களிலெல்லாம் கார்த்திக் இரண்டாவது ஹீரோதான். கவுண்டர்தான் நம்பர் ஒன். மேட்டுக்குடியில் நக்மாவோடு டூயட்டே பாடியவர். அதற்கும் முன்பே சோலோ ஹீரோவாகவும் நடித்து ஜெயித்தவர் கவுண்டர். இப்போது சின்ன இடைவெளி விட்டு, வாய்மை, 49 ஓ படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

  வடிவேலு

  வடிவேலு

  இவரும் ஒரு இடைவெளிவிட்டு வெள்ளித் திரைக்கு திரும்பியிருக்கிறார். அப்படி அவர் நடித்து வந்த தெனாலிராமன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகிவிட்டது. அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக நடிக்கவே வடிவேலு முக்கியத்துவம் தருகிறாராம். கிழக்காப்பிரிக்காவில் ராஜூ என்றொரு படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவதாக முன்பு கூறப்பட்டது. பிரபு தேவா படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

  விவேக்

  விவேக்

  இவருக்கும் ஹீரோ வேஷம் புதிதில்லை. மற்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில், கிட்டத்தட்ட அவர்களுக்கு இணையாகவும் நடித்திருக்கிறார்.

  இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் விவேக். ஒன்று நான்தான் பாலா. அடுத்தது பாலக்காட்டு மாதவன்.

  அதே நேரம் காமெடியனாகவும் தொடர்கிறார். சொல்லப் போனால், இந்த ஆண்டு அதிக படங்களில் காமெடி ரோல் பண்ணிக் கொண்டிருப்பவர் விவேக்தான். இதில், சூர்யா, அஜீத் என முன்னணி நடிகர்கள் படங்களும் அடங்கும்.

  சந்தானம்

  சந்தானம்

  இவரும் ஏற்கெனவே ஹீரோவாக நடித்தவர்தான். அறை எண் 305-ல் கடவுள் படத்தில் இவரும் கஞ்சா கருப்பும்தான் ஹீரோக்கள். பின்னர் வந்த சில படங்களில் கார்த்தி, உதயநிதி, ஆர்யா போன்றவர்களுக்கு இணையான முக்கியத்துவத்துடன் நடித்தார். இப்போது நடித்தால் தனி ஹீரோதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

  கஞ்சா கருப்பு

  கஞ்சா கருப்பு

  இவரும் ஹீரோ வாய்ப்புக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார். அதற்கு முதல்படியாக, தன் சொந்தப் பணத்தைப் போட்டு வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தையும் எடுத்து வருகிறார். காமெடி வேடங்களையும் விடுவதில்லை.

  சூரி

  சூரி

  ஹீரோவாகக் கிளம்பியிருக்கும் இன்னொரு காமெடி நடிகர் பரோட்டா சூரி. இப்போதுதான், விமல், சிவகார்த்திகேயன் என்ற வட்டத்திலிருந்து புரமோட் ஆகி, விஜய், சூர்யா என அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கிறார் சூரி. ஆனால் உடனடியாக அவரையும் தொற்றிக் கொண்டது ஹீரோ ஆசை. அதைத் தெரிந்து கொண்ட சிலர், வாங்க, உங்களுக்கேத்த கதை இருக்கு என அவரை வளைத்திருக்கிறார்கள்.

  காமெடி பஞ்சம்...

  காமெடி பஞ்சம்...

  ஆக, இன்றைய தேதிக்கு கோடம்பாக்கத்தில் காமெடியன்களுக்கு பெரும்பஞ்சம் ஏற்படும் நிலை. புதுப்புது காமெடியன்கல் களம் புக இதுதான் சரியான நேரம். பெரிய இயக்குநர்களும்கூட, திறமையான காமெடியன்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.

  English summary
  Nowadays most of the comedians in Kollywood turned as heroes and decided not to play comedy roles anymore.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X