»   »  ஆயிரக்கணக்கில் தவறுகள் செய்துள்ளேன்: பிரபுதேவா ஓபன் டாக்

ஆயிரக்கணக்கில் தவறுகள் செய்துள்ளேன்: பிரபுதேவா ஓபன் டாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழ்க்கையில் ஆயிரம் தவறுகள் செய்துள்ளதாக நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளது படக்குழு.

படம் மற்றும் வாழ்க்கை குறித்து பிரபுதேவா கூறுகையில்,

தேவி

தேவி

இயக்குனர் விஜய் என்னிடம் வந்து கதை சொன்னார். நான் என்னை படம் தயாரிக்க சொல்கிறார் என்று நினைத்து ஹீரோவாக யாரை போடலாம் என்றேன். அவரோ நீங்க தான் சார் ஹீரோ என்றார்.

ஹீரோவா

ஹீரோவா

நான் ஹீரோவாக நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் விஜய் படத்தில் நடிக்க முதலில் யோசித்தேன். பிறகு நடிக்கலாம் என துணிந்துவிட்டேன். கடந்த சில ஆண்டுகளாக நான் இயக்கத்தில் பிசியாக இருந்தேன்.

தவறுகள்

தவறுகள்

30 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் நான் ஆயிரக்கணக்கான தவறுகள் செய்துள்ளேன். தவறு செய்வது என் வேலை என நினைக்கிறேன். நாம் பல படங்கள் பண்ணுகிறோம். அனைத்து படங்களுக்குமே ஒரே மாதிரியாக கடினமாக உழைக்கிறோம். அது ஹிட்டானால் நாம் ஏதோ சரியாக செய்திருக்கிறோம் என அர்த்தம். இல்லை என்றால் நாம் ஏதோ தவறு செய்துள்ளோம்.

சாதனை

சாதனை

நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் என் வேலையை பற்றி அனைவரும் பேச வேண்டும், நல்ல பெயர் எடுக்க வேண்டும் என நினைத்தேன். காலப்போக்கில் நிறைய பணம் சம்பாதிக்க விரும்பினேன். தற்போது நல்ல பெயர் தான் முக்கியம் என பழைய நினைப்பிற்கே திரும்பிவிட்டேன். இது தான் பெரிய சாதனை.

English summary
Actor, director, dance master Prabhudeva said that he has committed thousands of mistakes in his career.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil