twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விளம்பரங்கள் மூலம் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கிறார்... நடிகர் அமிதாப்பச்சன் மீது வழக்கு

    |

    மும்பை: தொலைக்காட்சி விளம்பர நிகழ்ச்சி மூலம் நடிகர் அமிதாப்பச்சன் மூடநம்பிக்கையை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு உள்ளது.

    இந்தி சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப்பச்சன் பலதரப்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களிலும் தோன்றி வருகிறார். ஆனால், அவற்றில் உணவுப் பொருள் சம்பந்தமான விளம்பரம் ஒன்று மூடநம்பிக்கையை ஊக்குவிப்பதாக சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் என்பவர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது :-

    தொலைக்காட்சி விளம்பரம்...

    தொலைக்காட்சி விளம்பரம்...

    இந்தி நடிகர் அமிதாப்பச்சன் உணவு பொருள் நிறுவனம் ஒன்றின் சார்பாக தொலைக்காட்சி விளம்பர நிகழ்ச்சியில் நடித்து உள்ளார். அதில் அவர் மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் நடித்து இருக்கிறார்.

    மூடநம்பிக்கைக்கு விளம்பரம்...

    மூடநம்பிக்கைக்கு விளம்பரம்...

    பேய்-பிசாசு போன்றவை இருப்பதாக நம்பும் வகையில் அந்த விளம்பரம் அமைந்துள்ளது. இது பொய்யான, மூட நம்பிக்கைகளை ஊக்குவிப்பது ஆகும்.

    வழக்குப் பதிய மறுப்பு....

    வழக்குப் பதிய மறுப்பு....

    இதுதொடர்பாக நான் பாந்திரா போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டனர். இதனால் கோர்ட்டை நாடி உள்ளேன்.

    மூடநம்பிக்கை தடுப்பு சட்டம்...

    மூடநம்பிக்கை தடுப்பு சட்டம்...

    அமிதாப்பச்சன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது மராட்டிய மூட நம்பிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    விசாரணை...

    விசாரணை...

    நேற்று இந்த மனு நீதிபதி சீதா குல்கர்னி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் ஏப்ரல் 8-ந்தேதி விசாரிப்பதாக கூறி வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்.

    English summary
    A complaint was filed in a magistrate's court here against Bollywood superstar Amitabh Bachchan and a few others for allegedly promoting "false beliefs" in a TV advertisement.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X