»   »  தனுஷை நோக்கிப் பாயும் கெளதமின் "தோட்டா"

தனுஷை நோக்கிப் பாயும் கெளதமின் "தோட்டா"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் கவுதம் மேனனின் என்மேல் பாயும் தோட்டாவில் தான் நடிப்பதை நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கவுதம் மேனனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.மேலும் இந்தக் கதையில் அஜீத் நடிக்கவில்லை என்பதால் தனுஷை வைத்து கவுதம் எடுக்கப் போவதாகவும் கூறினர்.

Confirmed: Dhanush Next with Gautham Menon

இந்நிலையில் நடிகர் தனுஷ் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் "வருடக்கணக்கான பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த விஷயம் முடிவுக்கு வந்திருக்கிறது.

கொடிக்குப் பின் கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டாவில் நடிக்கிறேன்" என்று தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

தனுஷின் இந்தப் பதிவுக்கு நடிகை த்ரிஷா, காமெடி நடிகர் சதீஷ், தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மற்றும் அனிருத் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் த்ரிஷா, சதீஷ், டிடி என்று வாழ்த்திய அனைவருக்கும் பதிலளித்த தனுஷ் அனிருத்தின் வாழ்த்துக்கு பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தற்போது நடித்து வரும் கொடி படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Confirmed: Dhanush Next with Gautham Menon. He Tweeted "Years of discussion and finally it all boils down to "Yenai nokki paayum thotta" After kodi, my next is with Gautham vasudev menon".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil