ஆரம்பத்திலேயே வந்த பிரச்னை.. நீதிமன்றம் கொடுத்த சாதகமான தீர்ப்பு.. ரவி மோகன் நிம்மதியா இருப்பார்
சென்னை: ரவி மோகன் இப்போது புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அந்த நிறுவனத்தின் மூலம் ப்ரோ கோட் என்ற படம் உருவாகிவருகிறது. இதில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க இப்படத்தின் தலைப்பு தொடர்பாக டெல்லியை சேர்ந்த மதுபான நிறுவனம் பிரச்னையை உருவாக்கியது. இந்நிலையில் அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை கொடுத்திருக்கிறது.
நடிகர் ரவி மோகன் கோலிவுட்ல குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக விளங்கிவருகிறார். 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் வெற்றி, தோல்வி என இரண்டையும் பார்த்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் வில்லன் ரோலை செய்துவருகிறார் அவர்.
விவாகரத்து செய்து ரவி மோகன்: பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை அவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆர்த்தியும், ரவியும் தமிழ் சினிமாவின் சூப்பர் ரியல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஆர்த்தியின் தாய் சுஜாதா தயாரிப்பில் ரவி மோகன் சில படங்களில் நடிக்கவும் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆரம்பித்த பஞ்சாயத்து: அப்படி அவர் நடித்ததுதான் அவரது பெர்சனல் வாழ்க்கையில் பிரச்னையை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அதாவது ரவியை சுஜாதா முழுதாக கண்ட்ரோல் செய்ததாகவும் இதனால்; ரவிக்கும் ஆத்திக்கும் பிரச்னை ஏற்பட்டு ரவி பிரிவை அறிவித்ததாகவும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ரவியும் தான் வெளியிட்ட அறிக்கையில் அதனையே குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதனை சுஜாதா திட்டவட்டமாக மறுத்திருந்தார். தற்போது ஆர்த்தி மற்றும் ரவியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரவி: ஆர்த்தியை பிரிந்த அவர் ஜெயம் ரவிலிருந்து ரவி மோகனாக மாற்றமடைந்தார். மேலும் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். அந்த நிறுவனத்தின் மூலம் ப்ரோ கோட் என்ற படம் உருவாகி வருகிறது. இதில் ரவி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
பிரச்னை ஆரம்பம்: சூழல் இப்படி இருக்க டெல்லியை சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்று ப்ரோ கோட் என்ற பெயரை படத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று ரவி மோகன் ஸ்டுடியோஸுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. அதில் அந்தப் பெயரை தான் பதிவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இதனை அடுத்து ரவி மோகன் தரப்பு நீதிமன்றத்திற்கு சென்றது. அதில் திரைப்பட தலைப்பை பொறுத்தவரை அந்த பெயரை தங்கள் நிறுவனமே பதிவு செய்து வைத்திருப்பதாக வாதத்தை முன்வைத்தது.
நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு: மேலும் ப்ரோ கோட் வணிக சின்ன பதிவுக்கு நிறுவனம் அளித்த விண்ணப்பம் பரீசிலனையில்தான் இருக்கிறது என்றும் தெரிவித்தது. வாதத்தை கேட்ட நீதிமன்றம், ப்ரோ கோட் என்ற பெயரை ரவி மோகன் படத்துக்கு பயன்படுத்த தடை விதிக்கக்கூடாது என மூன்று வாரங்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த சாதகமான தீர்ப்பால் ரவி மோகனும், படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications