»   »  'தீமை'க்கு எதிராக நடுராத்திரியில் போராடிய 'தனி ஒருவன்'!

'தீமை'க்கு எதிராக நடுராத்திரியில் போராடிய 'தனி ஒருவன்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'தனி ஒருவன்' படத்திற்குப் பிறகு நடிகர் அரவிந்த்சாமிக்கு வாய்ப்புகள் குவிந்து தற்போது பிஸியான நடிகர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார்.

அவரது கைவசம் 'சதுரங்க வேட்டை 2', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'நரகாசூரன்' போன்ற படங்கள் இருப்பதால் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பில் இது அவருக்கு செகண்ட் இன்னிங்க்ஸ்.

இந்நிலையில் விழாக்காலம் என்பதால் நேற்று இரவு முழுவதும் சென்னையில் தொடர்ந்து பட்டாசு வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதனால் தூங்கமுடியாமல் தவித்த அவர் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளார்.

பட்டாசு சத்தத்தால் தூங்க முடியவில்லை :

இதுகுறித்து ட்விட்டரில், 'தொடர்ந்து பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த சத்தத்தால் தூங்க முடியவில்லை. திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மறுபடியும் மொதல்லருந்தா:

'சிறுது நேரம் சத்தம் நின்ற நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக காவல்துறை அதிகாரிக்கு போன் செய்து நன்றி தெரிவித்தேன். மீண்டும் பட்டாசு வெடிப்பதைத் துவங்கிவிட்டனர்.'

வேற யார் தடுக்குறது? :

'இப்படி நள்ளிரவில் பட்டாசு வெடிப்பதை போலீஸ் தடுக்கவில்லை என்றால் யார் செய்வார்கள்?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைத்தான் பண்ணனும் போல :

'எல்லோரும் வேலை செய்வதையும், குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்குப் போவதையும் விட்டுவிட்டு இவர்களுடன் விழாவைக் கொண்டாட வேண்டும்போல... அப்படித்தான் நினைக்கிறேன்' என ஆதங்கத்தோடு தெரிவித்திருக்கிறார் தனி ஒருவன் அரவிந்த்சாமி. 'தீமை தான் வெல்லும்...' எனப் பேசியவருக்கு வந்த சோதனையைப் பாருங்க...

English summary
Actor Arvindswamy fight at midnight against noise pollution in thiruvanmiyur. He shared his frustration in twitter against area people.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil