For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கிரிக்கெட் வீரனை… நடிகனாக மாற்றிய பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு… ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் !

  |

  சென்னை : ஒரு கிரிக்கெட் வீரனாக இருந்த என்னை நடிகனாக மாற்றிய பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு என்று ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

  Harbhajan singh ஒரு நல்ல நடிகர் | Friendship Movie | Producer Stalin interview | Filmibeat Tamil

  ஹர்பஜன் சிங், பிரண்ட்ஷிப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

  யு/ஏ சான்று பெற்ற அரண்மனை 3...ரிலீஸ் தேதியை அறிவித்த குஷ்பு யு/ஏ சான்று பெற்ற அரண்மனை 3...ரிலீஸ் தேதியை அறிவித்த குஷ்பு

  இத்திரைப்படம் செப்டம்பர் 17ந் தேதி திரையில் வெளியாக உள்ளது.

  ஹர்பஜன் சிங்

  ஹர்பஜன் சிங்

  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா ஹர்பஜன் சிங் உடன் இணைந்து பிரண்ட்ஷிப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷும் நடித்துள்ளார். மேலும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஸ்னீக் பீக் வீடியோ

  ஸ்னீக் பீக் வீடியோ

  சி.சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார். பிரண்ட்ஷிப் திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் 10 நிமிட ஸ்னீக் பீக் வீடியோவை இயக்குநர்கள் வெற்றிமாறன், பாண்டிராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டனர்.

  தமிழில் ட்வீட்

  தமிழில் ட்வீட்

  ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்ட வெற்றிமாறன், விஜய் சேதுபதி, பாண்டியராஜ் ஆகியோருக்கு தனித்தனியாக ட்விட்டரில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்து இருந்தார். இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அனைவருக்கும் தமிழில் ட்வீட் செய்திருந்தார்.

  தோல்வியே பாக்காத மனிதன்

  தோல்வியே பாக்காத மனிதன்

  தோல்வியே பாக்காத மனிதன் உலகத்துல இல்லைனு சொல்லுவாங்க. அந்த சரித்திரத்தை மாத்தி எழுதுன சக்தி @VetriMaaran சார் தான்.தோல்வியே உங்கள் வாழ்வில் இல்லை என்பதால் தான் நீங்கள் பிறந்தவுடனே உங்களுக்கு வெற்றிமாறன் என்று பெயர்சூட்டினார்களா சார்? திரையுலக அர்ஜுனன் அவர்களுக்கு நன்றி!

  சினிமா துறவி

  சினிமா துறவி

  சேது ஜி, ரொம்ப நன்றி."ஒரு வாரத்துக்கு 3 படம் கொடுக்கும் நீங்கள் ஓய்வு என்னும் வார்த்தையை உதறிய சினிமா துறவி". உங்கள் உழைப்பு! முயற்சி! ஆளுமை! மனிதர்களை மதிக்கும் குணம்! தலைகனம் இல்லா பண்பு! எல்லாம் தாரு மாரு.நடிப்பு அரக்கன்னா சும்மாவா.பஜ்ஜி ஹாப்பி அண்ணாச்சி என்று விஜய்சேதுபதிக்கு நன்றி கூறியிருந்தார்.

  உறவுகளின் பெருமை

  உறவுகளின் பெருமை

  சாலமன் பாப்பையா ஐயா குடும்பங்கள் ஒற்றுமையா இருக்க காரணம் ஆண்களா?பெண்களா? அப்பிடினு பட்டிமன்றம் நடத்துனா இயக்குனர் பாண்டிராஜா? அப்பிடினு இன்னுமொரு ஆப்ஷன் குடுக்கணும்.அந்த அளவுக்கு உறவுகளோட அருமை பெருமை எடுத்துகாற்ற @pandiraj_dirசார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் என தெரிவித்து இருந்தார்.

  நடிகனாக மாற்றிய பெருமை

  நடிகனாக மாற்றிய பெருமை

  ஒரு கிரிக்கெட் வீரனாக இருந்த என்னை நடிகனாக மாற்றிய பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு.அந்த நடிகனை #FriendshipMovie வாயிலாக கடைக்கோடி ரசிகன் வரை பார்த்து மகிழும் வகையில் தமிழகம் முழுவதும் படத்தை திரைக்கு கொண்டு வரும் மதிப்பிற்குரிய @BharathanPic அய்யா அவர்களுக்கு எனது நன்றிகள் எனப் பதிவிட்டுள்ளார்.

  English summary
  Former Indian Cricketer Harbhajan Singh on Twitter separately thanked Vetrimaran, Vijay Sethupathi and Pandyaraj for releasing the sneak peek video of his debut Tamil film titled Friendship. The biggest surprise was that he tweeted in Tamil.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X