»   »  லண்டனில் ரகசியமாக... காதலி தீபிகா படுகோனேவுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ரன்வீர்சிங்

லண்டனில் ரகசியமாக... காதலி தீபிகா படுகோனேவுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ரன்வீர்சிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது பிறந்த தினத்தை லண்டனில் காதலி தீபிகா படுகோனேவுடன் ரகசியமாகக் கொண்டாடியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக இருவரும் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடினார் ரன்வீர் சிங்.

பஜீரோ மஸ்தானி...

பஜீரோ மஸ்தானி...

இவர் தற்போது பஜீரோ மஸ்தானி பட வேலைகளில் பிசியாக உள்ளார். வெற்றிப்பட நாயகியாக வலம் வரும் தீபிகா தான் இப்படத்தில் ரன்வீருக்கு ஜோடி.

பிறந்தநாள் கொண்டாட்டம்...

பிறந்தநாள் கொண்டாட்டம்...

படவேலைகள் ஒருபுறம் இருந்தாலும், இருவரும் நிஜத்திலும் தங்கள் காதலுக்கும் நேரம் ஒதுக்க மறக்கவில்லை. தனது பிறந்தநாளை தனது மனம் கவர்ந்த நாயகியுடன் கொண்டாட விரும்பியுள்ளார் ரன்வீர்.

லண்டனில்...

லண்டனில்...

இதற்காக இருவரும் ரகசியமாக லண்டன் பறந்து விட்டார்கள். முதலில் தீபிகா மட்டும் பெங்களூரு வருவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்ட தீபிகா காதலருடன் லண்டன் பறந்துவிட்டார்.

காதல் பறவைகள்...

காதல் பறவைகள்...

இந்தக் காதல் பறவைகளை ஹீத்ரூ விமான நிலையத்தில் ஒன்றாகப் பார்த்ததாக அங்குள்ள "பட்சி"கள் தெரிவிக்கின்றன.

English summary
Bollywood’s craziest actor Ranveer Singh, who celebrates his 30th birthday on July 6, 2015, has reportedly flown to London to celebrate his birthday with his ladylove Deepika Padukone.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil