ஆளை காலி பண்ணிடுவேனு மிரட்டிய சரத்குமார்.. விக்ரம்ட்ட அப்படி செஞ்சிருக்கக்கூடாது.. தேவயானி கணவர் ஓபன் டாக்

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த தேவயானி இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலக்கிவருகிறார். இயக்கத்திலிருந்து மொத்தமாக ஒதுங்கிவிட்ட ராஜகுமாரன் இடையில் சில படங்களில் மட்டும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் விக்ரமனின் ஆஸ்தான உதவி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ராஜகுமாரன். சூர்ய வம்சம் திரைப்படத்தில் பேருந்தில் அமர்ந்துகொண்டு மணிவண்ணனை கலாய்க்கும் சீனில் நடித்து தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார் அவர். தொடர்ந்து வேலை கற்றுக்கொண்ட அவர் நீ வருவாய் என படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அதில் அஜித், தேவயானி, பார்த்திபன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படமும் சூப்பர் ஹிட்டித்தது.

விண்ணுக்கும் மண்ணுக்கும்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சரத்குமார், விக்ரம், குஷ்பூ, தேவயானி உள்ளிட்டோரை வைத்து 2001ஆம் ஆண்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கினார். அந்தப் படமும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இருப்பினும் வசூல் ரீதியாக போகவில்லை. மேற்கொண்டு அவர் காதலுடன், சிவராம் உள்ளிட்ட சில படங்களை மட்டுமே இயக்கினார்.

Devayani s husband Rajakumaran shared his experience working with Vikram and Sarathkumar
Photo Credit:

தேவயானியுடன் திருமணம்: இதற்கிடையே விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் பணியாற்றியபோது ராஜகுமாரன் மீது தேவயானிக்கு காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு ராஜகுமாரனும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து 2001ஆம் ஆண்டு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். இது பலருக்கும் சர்ப்ரைஸாக இருந்தது. ஏனெனில் தேவயானி அந்த சமயத்தில் பீக் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருந்தார்.

சுமூகமான வாழ்க்கை: திருமணத்துக்கு பிறகு தேவயானியின் நடிப்பு பயணத்துக்கு ராஜகுமாரன் தடை எதுவும் போடவில்லை. அதேசமயம் அவர் படம் இயக்குவதையும் நிறுத்திவிட்டார். அந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி கலக்கிவருகிறார். ராஜகுமாரனும் இடையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ராஜகுமாரன் அளித்த பேட்டியில், "விண்ணுக்கும் மண்ணுக்கும் பட ஷூட்டிங்கின்போது எனக்கும் சரத்குமாருக்கும் பெரிய பிரச்னை எல்லாம் வந்திருக்கிறது. விக்ரமிடமும் நான் அதிகம் உழைப்பு வாங்கிவிட்டேன். அவருக்கு காலில் பிரச்னை என்று எனக்கு தெரியாது. சில சமயங்களில் ஏழு முதல் எட்டு டேக்குகள்வரை எல்லாம் அவரிடம் வாங்கியிருக்கிறேன். அவரிடம் அப்படி நான் செய்திருக்கக்கூடாதுதான்.

மிரட்டிய சரத்குமார்: அதுதான் அவருக்கு என் மீது வருத்தமாக இருந்திருக்கும். அதேபோல் அப்படத்துக்கு 20 நாள் கால்ஷீட், 48 லட்சம் சம்பளம் என்றுதான் சரத்துக்கு பேசியிருந்தோம். அவர் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே 40 லட்சம் ரூபாய்வரை கம்பெனியில் வாங்கிவிட்டார். மேற்கொண்டு சம்பளம் வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார். சௌத்ரி கொடுக்க மறுத்துவிட்டார். அதனால் 17 நாட்கள் மட்டும் நடித்த சரத்; மூன்று நாட்கள் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

நானோ அவர் இல்லாமலேயே சில சீன்களை எல்லாம் எடுத்துக்கொண்டிருந்தேன். இது சரத்தின் காதுகளுக்கு போய்விட்டது. உடனே எனக்கு ஃபோன் செய்து, 'உனக்கு என்ன தைரியம். நான் இல்லாம எப்படி என் சம்பந்தப்பட்ட சீன்களை எடுக்கிறார். உன் அட்ரெஸ்ஸை சொல்லு ஆளை அனுப்புறேன். உன்னை காலி பண்ணிடுவேன். உன் சாம்பலே தமிழ்நாட்டில் இருக்காது என மிரட்டினார். நான் கூலாக எனது அட்ரெஸ்ஸை சொல்வேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X