»   »  85 லட்சம் கேட்டு தனுஷ் லடாய்

85 லட்சம் கேட்டு தனுஷ் லடாய்

Subscribe to Oneindia Tamil

ரூ. 85 லட்சம் சம்பளப் பாக்கியை வசூலித்துத் தர வேண்டும் என்று கோரி, தயாரிப்பாளர் கேயார் மீது நடிகர் தனுஷ், நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனுஷ் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக கேயார் எச்சரித்துள்ளார்.

கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ஜோகி படம்தான் தமிழில் பரட்டை என்கிற அழகுசுந்தரம் என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஜோகியைப் பார்த்த ரஜினி, படத்தில் இம்ப்ரஸ் ஆகி அதை தமிழில் தனுஷை வைத்துத் தயாரிக்க விரும்பினார்.

அவரது கோரிக்கையை ஏற்று தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார் கேயார்.

முதலில் டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம்தான் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அதிக கால அவகாசம் கேட்டதால் ராஜு சுந்தரத்தை நீக்கி விட்டு ரஜினி படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்குநராக்கப்பட்டார்.

இந் நிலையில், கேயார் சம்பளப் பாக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளார் தனுஷ்.

இதுதொடர்பாக நடிகர் சங்கத்தில் அவர் கொடுத்துள்ள புகாரில், கேயார் தனக்குத் தர வேண்டிய ரூ. 85 லட்சம் பாக்கித் தொகையை வசூலித்துத் தருமாறு கோரியுள்ளார்.

இதுகுறித்து கேயார் கூறுகையில், கன்னடத்தில் வெற்றி பெற்ற ஜோகி என்ற படத்தின் தமிழ் உரிமையை ரூ. 1 கோடிக்கு வாங்கினேன். இதில் நடிக்க பெரிய நடிகர்கள் ஆசைப்பட்டனர்.

ஆனால் நான் நடிகர் தனுசை ஒப்பந்தம் செய்தேன். அவர் நடித்த புதுப்பேட்டை, அது ஒரு கனாக்காலம் படங்கள் தோல்வி அடைந்தன. ஆனாலும் தனுஷ் மீது நம்பிக்கை வைத்து தனுசை வைத்து படத்தை எடுத்தேன்.

அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசப்பட்டது. இதில் ரூ. 12 லட்சம் தான் பாக்கியுள்ளது. ஆனால் ரூ. 85 லட்சம் பாக்கியிருப்பதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் தனுஷ்.

முதலில் எங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டு அந்த தேதியில் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்தார். இதனால் ரிலீஸ் தேதி தள்ளிப்ேபானது. பைனான்சியருக்கு கொடுக்க வேண்டிய வட்டியும் ஏறியது.

இந்த நிலையில் என் மீது அவதூறாகப் புகார் கூறியுள்ளார் தனுஷ். இது தொடர்பாக தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடருவேன் என கூறியுள்ளார் கேயார்.

இந்த விவகாரம் எங்கு போய் முடியுமோ

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil