»   »  புழுதி கிளப்பும் தனுஷ்!

புழுதி கிளப்பும் தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெயில் கொடுத்த வசந்தபாலன் அடுத்து எடுத்திருக்கும் சப்ஜெக்ட் புழுதி.

தெற்கத்திச் சீமைக்காரராக இருப்பதாலோ என்னவோ, வெயில், புழுதி, மண் ஆகியவற்றின் படு பாசக்காரராக இருக்கிறார் வசந்தபாலன். மதுரையைத் தாண்டி விட்டால் இந்த மூன்றுமே படு விசேஷமானவை.

தலைக்கு மேல் வெள்ளை வெயில் விளையாடும், சாலையெல்லாம் புழுதி நடமாடும், பேச்சில் மண் வாசனை தூக்கும். இந்த மூன்றையும் தவிர்த்து தென் மாவட்ட மக்களைப் பார்க்கவே முடியாது.

அதனால்தான் தனது முதல் படத்தின் நாயகனாக வெயிலை வைத்தார் வசந்தபாலன். அடுத்து புழுதி என்ற பெயரிட்டு புதுப் படம் இயக்க வருகிறார் வசந்தபாலன்.

இப்படத்தில் தனுஷ்தான் நாயகன். பொல்லாதவனை முடித்து விட்டு புழுதிக்குத் தாவுகிறாராம். ஏற்கனவே பரட்டை என்கிற அழகு சுந்தரத்தை முடித்து விட்டார் தனுஷ். அடுத்து பொல்லாதவன் படத்துக்குப் போகிறார். இடையில் அண்ணனின் உதவியாளர் ஜவஹர் இயக்கும் யாடி நீ மோகினியில் நயனதாராவுடன் நடிக்கிறார். வருகிற 18ம் தேதியுடன் இப்பட ஷூட்டிங் முடிகிறதாம்.

இனிமேல் படு கவனமாக கதைகளைத் தேர்வு செய்து நடிக்கப் போகிறாராம் தனுஷ். இதனால்தான் வருகிற வாய்ப்புகளையெல்லாம் வாரிப் போட்டுக் கொள்ளாமல், பார்த்துப் பார்த்து படங்களை செலக்ட் செய்கிறாராம்.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்தான் புழுதியை தயாரிக்கப் போகிறார். இது பக்கா கிராமத்து சப்ஜெக்ட்டாம். தனுஷின் உடல் வாகுக்கேற்ற கேரக்டராம். படத்தின் நாயகியை இன்னும் முடிவு செய்யவில்லை.

புழுதியோடு, தூளும் சேர்த்து கிளப்புங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil