»   »  மீண்டும் முள்ளும் மலரும்

மீண்டும் முள்ளும் மலரும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் வித்தியாச நடிப்பில் வெற்றிக் கொடி நாட்டிய முள்ளும் மலரும் ரீமேக் ஆகிறது. ரஜினி நடித்த கேரக்டரில் அவரது மருமகன் தனுஷ் நடிக்கவுள்ளாராம்.

மகேந்திரனின் முத்திரைப் படங்களில் ஒன்று முள்ளும் மலரும்.

வரது அருமையான கதை, திரைக்கதை, வசனம், பாலு மகேந்திராவின் மயக்கும் கேமரா, இளையராஜாவின் மிரட்டல் இசை, ரஜினிகாந்த், ஷோபா, படாபட் ஜெயலட்சுமியின் பண்பட்ட நடிப்பு என அசத்தலான கலவையில் அமைதந்த வெற்றிப் படம் முள்ளும் மலரும்.

1978ல் வெளியான இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் முள்ளும் மலரும் ரசிகர்களை ரசிக்க வைக்க வருகிறது - ரீமேக் வடிவில்.

ரஜினி கேரக்டரில் தனுஷ் நடிக்கவுள்ளாராம். ஷங்கரின் உதவியாளரான காந்தி கிருஷ்ணா இப்படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.

ஒரிஜினல் படத்தைத் தயாரித்த வேணு செட்டியாரின் புதல்வர்களான பிரேம் ஆனந்த், செந்தில்வேல் ஆகியோர் ரீமேக்கைத் தயாரிக்கவுள்ளனர்.

ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு ஆகியோரது கேரக்டர்களில் யார் நடிக்கவிருப்பது என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil