»   »  கனவைத் துரத்தும் தனுஷ்!

கனவைத் துரத்தும் தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்கென்று ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவு திடீரென சிலரால் பறிபோகிறது. அதை மீண்டும் அடைய தீவிரமாக முயற்சிக்கிறேன். அதுதான் பொல்லாதவன் படத்தின் கதை என்கிறார் தனுஷ்.

தனுஷ் நடித்து வரும் புதிய படம் பொல்லாதவன். மாமனார் ரஜினிகாந்த் பல்லாண்டுகளுக்கு முன்பு நடித்து ஹிட் ஆன படத்தின் டைட்டிலில் நடித்து வரும் தனுஷ், அதேபோல இந்தப் படமும் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

இது அந்தப் பொல்லாதவனா என்று தனுஷிடம் கேட்டால், இந்தப் படத்தில் என்னோட பெயர் பிரபு சார். என்னோட நிஜப் பெயரும் அதுதான்.

எனக்கென்று ஒரு கனவு இருக்கிறது. ஆனால் சிலரால் அது பறிபோய் விடுகிறது. பறிபோன கனவை மீண்டும் அடையப் போராடுகிறேன். அதுதான் இப்படத்தின் கதை. மற்றபடி நீங்கள் நினைப்பது போல இது அந்தக் கதை அல்ல என்றார் விவரமாக.

ரஜினி கூட நடிப்பீங்களா என்றால், அவர் மலை, நான் மடு. மோத நினைப்பது தவறு. தனது படத்தில் கேரக்டர் இருந்தால், நான் பொருத்தமாக இருப்பதாக நினைத்தால் அவரே கூப்பிடுவார். நானும் எனக்குப் பொருத்தமான கேரக்டர் இருந்தால்தான் நடிப்பேன்.

என்னை அவரோடு ஒப்பிடுவதே தவறு. அதிலும் சினிமா வாரிசு என்றெல்லாம் கூப்பிடவே கூடாது. நாங்கள் எல்லாம் சிறு துளி, அவர் பெரும் கடல். அவர் பெரிய வானம், நாங்கள் கீழே இருப்பவர்கள்.

நாங்கள் நினைத்தால் கூட அவருடைய இடத்துக்குப் போக முடியாது என்றார்.

மாமனார் பற்றி இவ்வளவு கேர்ஃபுல்லாக பேசும் தனுஷை, ரஜினி நடிக்கும் சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படத்தில் ஸ்டண்ட் சீனுக்குக் கூப்பிட்டாராம் செளந்தர்யா. ஆனால் அதுபோன்ற சண்டைக் காட்சியெல்லாம் என்னால் செய்ய முடியாது என்று ஜகா வாங்கி விட்டாரம் தனுஷ்.

அப்படியா என்று தனுஷிடம் கேட்டால், சுல்தான் தி வாரியர் படத்தில் ஃபைட் செய்ய வேண்டும் என்றார் செளந்தர்யா. என்ன பண்ண வேண்டும் என்று கேட்டேன். நிறைய சாகசம் செய்ய வேண்டும் என்றார். நமக்கெல்லாம் அது சரிப்பட்டு வராது என்று கூறி விட்டேன். இதனால் ஒரு சீனாக்காரர் இப்போது அந்த வேடத்தில் நடிக்கிறார் என்றார்.

அடடா, ரஜினியுடன் பிட் ரோலில் நடிக்க வந்த வாய்ப்பை இப்படி விட்டுட்டீங்களே தனுஷ்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil