»   »  தனுஷ் நடிக்கும் அடுத்த படம் இதுவா.. தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ஆர்வம்!

தனுஷ் நடிக்கும் அடுத்த படம் இதுவா.. தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ஆர்வம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷின் அடுத்த படம் என்ன?- வீடியோ

சென்னை : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பிஸியாக இருக்கும் தனுஷ் அடுத்து தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற 'நீடி நாடி ஒகே கதா' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம்.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. 'தி எக்ஸ்ட்ரடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார்.

இவை தவிர, 'மாரி 2', 'எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தனுஷ் 'நீடி நாடி ஒகே கதா படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம்.

தனுஷ் பிஸி

தனுஷ் பிஸி

தெலுங்கில் ரீலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'நீடி நாடி ஒகே கதா' படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பிஸியாக வலம் வருகிறார் தனுஷ்.

கைவசம் சில படங்கள்

கைவசம் சில படங்கள்

இவர் தற்போது 'மாரி 2', 'வடசென்னை', 'எனை நோக்கி பாயும் தோட்டா', ஹாலிவுட்டில் 'தி எக்ஸ்ட்ரடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்' என பல படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் எந்த படங்கள் முதலில் வெளிவரும் என தெரியவில்லை.

தமிழ் ரீமேக்

தமிழ் ரீமேக்

தனுஷ் ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி, நடிக்கவும் உள்ளார். இந்நிலையில், தனுஷ் கடந்த மாதம் தெலுங்கில் வெளியான 'நீடி நாடி ஒகே கதா' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே ரீமேக் படங்கள்

ஏற்கெனவே ரீமேக் படங்கள்

தனுஷ் ஏற்கெனவே சில ரீமேக் படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் நடித்த 'யாரடி நீ மோகினி', 'உத்தமபுத்திரன்', 'குட்டி' உள்ளிட்ட படங்கள் தெலுங்கு படத்தின் ரீமேக் தான். மீண்டும் 'நீடி நாடி ஓகே கதா' படத்தின் மூலம் ரீமேக் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

கலைப்புலி எஸ்.தாணு

கலைப்புலி எஸ்.தாணு

இது கல்வியை மையப்படுத்திய படம் என்பதால் தனுஷ் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம். இதன் தமிழ் ரீமேக் உரிமையை கலைப்புலி எஸ்.தாணு கைப்பற்றியிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

English summary
Dhanush interested to act in Tamil remake of 'Needi Naadi Oke Katha' Telugu film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X