மீண்டும் சிவாஜி பட டைட்டிலை கைப்பற்றிய தனுஷ்... என்ன படம் தெரியுமா?

சென்னை : கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிஸியான நடிகராக இருந்து வருகிறார் தனுஷ். இவர் நடித்துள்ள படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த படங்கள் அனைத்துமே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளன.

தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், இந்தியில் Atrangi Re, ஹாலிவுட்டில் The Grey man ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிக்க தனுஷிடம் பேசப்பட்டு வருகிறது.

மீண்டும் பாலிவுட்டில் தனுஷ்

மீண்டும் பாலிவுட்டில் தனுஷ்

Raanjhanaa படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த தனுஷ், மீண்டும் Atrangi Re என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தனுஷுடன் அக்ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். Raanjhanaa படத்தை இயக்கிய டைரக்டர் ஆனந்த் எல்.ராய் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.

தள்ளி போன ரிலீஸ்

தள்ளி போன ரிலீஸ்

முதலில் இந்த படத்தை இந்த ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று தான் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டது. இருந்தாலும் ரிலீஸ் பற்றி ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வந்தனர்.

டைட்டில் அறிவிப்பு

டைட்டில் அறிவிப்பு

இந்நிலையில் செப்டம்பர் மாத இறுதியில் அக்ஷய் குமார் அளித்த பேட்டியில், இந்த படத்தை நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறினார். நெட்ஃபிளிக்சில் வெளியிடப்பட உள்ள இந்த படம் தமிழிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் தமிழ் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தனுஷ் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

சிவாஜி பட டைட்டில்

சிவாஜி பட டைட்டில்

Atrangi Re படத்திற்கு தமிழில் கலாட்டா கல்யாணம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷுட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் தான் தமிழ் மற்றும் இந்தி டப்பிங்களை பேசி முடித்தார் தனுஷ். ரொமான்டிக் காமெடி படமாக இந்த படத்திற்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இது முதல் முறையல்ல

இது முதல் முறையல்ல

சிவாஜி, ஜெயலலிதா, நாகேஷ் உள்ளிட்டோர் நடித்த காமெடி படமான கலாட்டா கல்யாணம் 1968 ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்த இந்த படத்தின் டைட்டிலை தற்போது தனுஷ் நடித்துள்ள படத்திற்கும் பயன்படுத்த உள்ளனர். சிவாஜி நடித்த மெகாஹிட் படங்களின் பெயர்களில் தனுஷ் நடிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடித்துள்ளார்.

Recommended Video

Thala Ajith & Dhanush-க்கு இவ்ளோ பெரிய பசங்களா | Anoushka Ajith, Yatra dhanush
மூன்றாவது படம்

மூன்றாவது படம்

இதற்கு முன் திருவிளையாடல் ஆரம்பம், கர்ணன் போன்ற சிவாஜி நடித்த மெகா ஹிட் படங்களின் டைட்டில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படங்களும் செம ஹிட்டாகின. அதிலும் கர்ணன் படம் பல விருதுகளையும் பெற்று, தனுஷிற்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X