»   »  24... உள்ளத்தைக் கொள்ளையடித்த டீசர்... சூர்யாவுக்கு தனுஷ் பாராட்டு!

24... உள்ளத்தைக் கொள்ளையடித்த டீசர்... சூர்யாவுக்கு தனுஷ் பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 24 பட டீசருக்கு நடிகர் தனுஷ் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த 24 பட டீசர் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்தில் சூர்யா மூன்று வித கெட்டப்புகளில் நடித்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யாமேனன் நடித்துள்ளனர். ஏற்கனவே அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் சமந்தா ஜோடியாக நடித்திருந்தார்.

ஒரு நிமிடம் ஓடும் இந்த டீசர், விஞ்ஞானம், த்ரில்லர், ஆக்‌ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு...

ரசிகர்கள் வரவேற்பு...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசரை, இதுவரை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

தனுஷ் பாராட்டு...

இந்நிலையில், சூர்யாவின் டீசருக்கு நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பு...

கடின உழைப்பு...

அந்தப் பதிவில் அவர், ‘24 பட டீசர் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது. சர்வதேச தரத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பிரேமிலும் சூர்யாவின் கடின உழைப்பு மிளிர்கிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

சம்மர் ஸ்பெஷல்...

சம்மர் ஸ்பெஷல்...

இப்படம் கோடை ஸ்பெஷலாக ரிலீசாக இருக்கிறது. பசங்க 2 படத்தைப் போலவே இப்படமும் சூர்யாவிற்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Actor Suriya's '24' movie teaser was released friday evening amid huge expectations and has been receiving phenomenal positive responses all over. After the release of much expected teaser, Dhanush has come forward with an appreciation in his social media page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil