»   »  அஜித், விஜய்யை தொடர்ந்து... படக்குழுவுக்கு பிரியாணி விருந்து வைத்த தனுஷ்!

அஜித், விஜய்யை தொடர்ந்து... படக்குழுவுக்கு பிரியாணி விருந்து வைத்த தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாரிப் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, படக்குழுவிற்கு பிரியாணி விருந்து பரிமாறியுள்ளார் நடிகர் தனுஷ்.

அனேகன் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி. இப்படத்தில் தனுஷின் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். முன்னதாக காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன்.

பாடகர் விஜய் ஜேசுதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

சேரித் தலைவன்...

சேரித் தலைவன்...

சென்னையில் உள்ள சேரியை பின்னணியாகக் கொண்ட கதைக்களத்தில், சேரி இளைஞராக நடித்துள்ளார் தனுஷ். இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது.

தடபுடல் விருந்து...

தடபுடல் விருந்து...

இந்தப் படத்தின் படபிடிப்பு கடந்த வாரம் தூத்துக்குடியில் முடிவடைந்தது. கடைசி நாளன்று மொத்த பட யூனிட்டுக்கும் தடபுடலான விருந்து வைத்திருக்கிறார் தனுஷ்.

பிரியாணி விருந்து...

பிரியாணி விருந்து...

படபிடிப்பு நடக்கும் போதும், நடந்து முடிந்த பிறகும் படக்குழுவினருக்கும் தனது கையால் பிரியாணி செய்து பரிமாறும் பழக்கத்தை முதலில் அறிமுகபடுத்தியவர் அஜித். நாளடைவில் அதை விஜய் பின்தொடர்ந்தார்.

தனுஷும் இணைந்தார்...

தனுஷும் இணைந்தார்...

இந்நிலையில் அந்த வரிசையில் இப்போது தனுஷும் இணைந்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் இப்படம் தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The whole unit of ‘Maari’ were treated to an extravagant biriyani feast by hero Dhanush on the last day of shooting at Thoothukudi. The efficiency of this team should be lauded as this big film has taken such a short time to complete.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil