»   »  விஐபி 3 நிச்சயம் உண்டு.. ஆனா டைரக்ஷன் மட்டும்...! - தனுஷ்

விஐபி 3 நிச்சயம் உண்டு.. ஆனா டைரக்ஷன் மட்டும்...! - தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விமர்சனங்கள் முன்னே பின்னே இருந்தாலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சாதாரண வெற்றி இல்லை... இந்தியா முழுவதும் இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு.

தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 50 கோடியை நெருங்கிவிட்டது வசூல்.

தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 50 கோடியை நெருங்கிவிட்டது வசூல்.

இந்த வெற்றி சௌந்தர்யாவுக்குதான் மிக முக்கியம். விஐபி 2 அவருக்கு இரண்டாவது படம் என்றாலும், லைவ் ஆக்ஷன் என்ற வகையில் முதல் படம்.

வணிக ரீதியாக இவ்வளவு பெரிய வெற்றியை திரையுலகமே கூட எதிர்ப்பார்க்கவில்லை. அந்த உற்சாகத்தில் விஐபி 3 நிச்சயம் உண்டு என்கிறார் தனுஷ்.

விஐபி 3

விஐபி 3

"விஐபி 3 நிச்சயம் உண்டு. ஆனால் எப்போது என்பதை இப்போதே சொல்ல முடியாது. அடுத்து 3 படங்கள் உள்ளன. அதற்குப் பிறகோ, முன்போ விஐபி 3 அறிவித்துவிடுவேன்.

இயக்குநர் யார்?

இயக்குநர் யார்?

அந்தப் படத்துக்கு இயக்குநர் யார் என்பதை இப்போதே சொல்ல முடியாது. நான் இயக்குவேனா என்பதும் தெரியாது.

விமர்சனங்களை எதிர்ப்பார்த்தேன்

விமர்சனங்களை எதிர்ப்பார்த்தேன்

படத்துக்கான எதிர்மறை விமர்சனங்களை நான் எதிர்ப்பார்த்தே இந்தப் படம் செய்தேன். ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. இந்தப் படம் அன்பைச் சொல்கிறது. பாஸிடிவாக முடிகிறது. அதுதான் இந்த வெற்றியைத் தந்திருக்கிறது.

அன்பை பரப்புங்கள்

அன்பை பரப்புங்கள்

இந்த உலகுக்கு இப்போதைய தேவை அன்புதான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பைப் பரப்புங்கள். அதுதான் இந்த உலகைக் காப்பாற்றும். எதிர்ப்புகள், வெறுப்புகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. என் அடுத்தடுத்த படங்களும் பாஸிடிவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்," என்கிறார் தனுஷ்.

English summary
Dhanush has confirmed another sequal for VIP.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil