இட்லி கடை மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறா?.. மௌனத்தை கலைத்த தனுஷ்.. பஞ்சாயத்து ஓவர்
சென்னை: நடிகர் தனுஷ் அவரே இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதில் அவருடன் அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன் என பலர் நடித்திருக்கிறார்கள். அவரே படத்தை இயக்கியிருப்பதன் காரணமாக இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு விழுந்திருக்கிறது. இந்நிலையில் தனுஷின் பேச்சு ட்ரெண்டாகியிருக்கிறது.
பான் இந்தியா மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரைப் பெற்றவர் தனுஷ். ஆரம்பத்தில் தனது சகோதரர் செல்வராகவனின் துணையோடு வளர்ந்தவர் ஒரு கட்டத்துக்கு மேல் தனது திறமையால் மட்டுமே வளர ஆரம்பித்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடும் தன்மையுடைய தனுஷ் ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்று இருக்கிறார். தமிழ் மட்டும் இன்றி பாலிவுட், ஹாலிவுட் ஆகிய திரைத்துறையிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார் தனுஷ்.
தனுஷுக்கு ஏற்பட்ட சறுக்கல்: அவரது கரியர் உச்சத்தில் சென்றுகொண்டிருக்க சமீபமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே தோல்வியைத்தான் சந்தித்தன. சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் கொடுத்த ஹிட் வைபை அடுத்தடுத்து வந்த கேப்டன் மில்லர், ராயன், குபேரா ஆகிய படங்கள் பெறுவதற்கு தவறிவிட்டன. ராயன் திரைப்படத்தை எல்லாம் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.
இயக்கத்திலும் சூப்பர்: நடிப்பு மட்டுமின்றி மற்ற துறைகளிலும் அவர் தனது தடத்தை பதித்திருக்கிறார். அதன்படி முதன்முதலாக ராஜ்கிரணை வைத்து அவர் இயக்கிய பவர் பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து தனது சகோதரி மகனான பவிஷை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் தோல்வியை சந்தித்தது. அதிலும் தனது ஐம்பதாவது படம் ராயன் படத்தை தனுஷ் இயக்கினார் என்பதும் கவனிக்கத்தக்கது. அந்த படம் அவருக்கு ஆறாத வடுவை கொடுத்துவிட்டது. இப்போது அவர் இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இட்லி கடை ரிலீஸ்: இந்த படத்தின் மீது தீராத ஆவல் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. படமானது அக்டோபர் ஒன்றாம் தேதி ரிலீஸாக உள்ளது. கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக தனுஷ் எடுத்திருப்பது தெரிகிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் அந்த ட்ரெய்லரில் சில காட்சிகள் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையோடு ஒத்துப்போவதாக ரசிகர்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டனர். அது மட்டுமின்றி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறுதான் இட்லி கடை படமாகியிருக்கிறதோ என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைத்தார்கள்.
விளக்கம் அளித்த தனுஷ்: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் கலந்துகொண்டார். அவரிடம் பரிதாபங்கள் கோபியும், சுதாகரும் கலந்துரையாடினர். அப்போது கோபி தனுஷிடம் இந்த திரைப்படம் கோவையை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்தது என்கிறார்களே என கேள்வி வைத்தார். அதற்கு பதில் அளித்த, தனுஷ் அதெல்லாம் இல்லை நான் எனது கிராமத்தில் என்னை பாதித்த சில கதாபாத்திரங்களை வைத்துதான் இந்த கதையை எழுதி இருக்கிறேன். முழுக்க முழுக்க இது எனது சொந்த கற்பனைதான் என்று குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











