»   »  சுத்தி சுத்தி மறுபடியும் பெட்ரோமாக்ஸ் லைட்டுக்கே அடிபோடும் தனுஷ்

சுத்தி சுத்தி மறுபடியும் பெட்ரோமாக்ஸ் லைட்டுக்கே அடிபோடும் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காலா படத்தில் நடிக்க ஆசையாகத் தான் இருக்கு என்ன செய்ய என்று மீண்டும் தெரிவித்துள்ளார் தனுஷ்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், கஜோல் உள்ளிட்டோர் நடித்துள்ள விஐபி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.


இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் கூறியதாவது,


நன்றி

நன்றி

இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சி இசையை பற்றியது. ஷான் ரோல்டன் ஒரு ஜீனியஸ். அவர் பெயரை சரியாக உச்சரிக்கவே எனக்கு 3 மாதம் ஆனது.


சவுந்தர்யா

சவுந்தர்யா

விஐபி படத்தை விட விஐபி 2 படம் பெரியதாக வந்துள்ளது. இதற்கு காரணம் இயக்குனர் சவுந்தர்யா. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.


திறமைசாலி

திறமைசாலி

சவுந்தர்யா மிக மிக திறமைசாலி. இயக்குனராக அவர் வாழ்வில் இந்த படம் முதல்படி. பொறுமையாக இருந்து கனவுகளை நனவாக்குக என்று மச்சினியை வாழ்த்தினார் தனுஷ்.


காலா

காலா

காலா படத்தில் நான் இளம் வயது ரஜினியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனக்கும் நடிக்க ஆசை தான். ஆனால் எதுவும் முடிவாகவில்லை என்றார் தனுஷ்.


ரஞ்சித்

ரஞ்சித்

காலா படத்தில் ஒரு காட்சியிலாவது வந்துவிட வேண்டும் என தனுஷ் துடிக்கிறார். ஆனால் இது என் படம் உங்கள் இஷ்டத்திற்கு கதையை மாற்ற மாட்டேன் என்று தனுஷை ஓரங்கட்டியுள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Dhanush has expressed his desire to act in Rajinikanth starrer Kaala being directed by Pa. Ranjith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil