»   »  ஐஸ்வர்யா மாதிரி ஒரு மனைவி அமைவது அரிது! - தனுஷ் பெருமிதம்

ஐஸ்வர்யா மாதிரி ஒரு மனைவி அமைவது அரிது! - தனுஷ் பெருமிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐஸ்வர்யா மாதிரி மனைவி அமைவது அரிது என்று பெருமையாகக் கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார் தனுஷ். இருவருக்கும் லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கருத்து வேறுபாடு என்று சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து தனுஷ் அளித்துள்ள விளக்கத்தில், "என்னை அழகாக மாற்றியவர் ஐஸ்வர்யா. என் குடும்பத்தினரையும் நன்றாக கவனித்துக் கொள்கிறார்.

Dhanush hails his wife Aishwarya

ஐஸ்வர்யா, எனது குழந்தைகள், சகோதரர், பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிசியாக நடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

தொழில் ரீதியாக என்னால் அடிக்கடி வீட்டில் இருக்க முடியாது. அப்போது ஐஸ்வர்யா குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பார்த்துக் கொள்கிறார். தன் கேரியரையும் பார்த்துக்கொள்கிறார். அவரைப் போல ஒரு மனைவி அமைவது அரிது," என்றார்.

English summary
Actor Dhanush says the there is no difference of opinion with his wife Aishwarya.
Please Wait while comments are loading...