»   »  தனுஷ்தான் இனி இளைய சூப்பர் ஸ்டார்!- ரெடி.. ஸ்டார்ட் த மீசிக் நெட்டிசன்ஸ்!!

தனுஷ்தான் இனி இளைய சூப்பர் ஸ்டார்!- ரெடி.. ஸ்டார்ட் த மீசிக் நெட்டிசன்ஸ்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ்தான் இனி இளைய சூப்பர்ஸ்டார் என்று தொடரி விழாவில் நடிகர் தம்பி ராமையா அறிவித்தார்.

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தொடரி. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.


Dhanush here after Ilaiya Superstar

விழாவில் பேசிய தம்பி ராமையா, "தம்பி தனுஷ் மாதிரி அபார நடிப்பாற்றல் கொண்டவரைப் பார்க்க முடியாது.


அவர் எம்ஜிஆர், சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கலவையாக இருக்கிறார். என்னைப் பொருத்தவரை இனி அவர்தான் இளைய சூப்பர் ஸ்டார். அந்தப் பட்டத்துக்கு அவர்தான் பொருத்தமானவர்," என்றார்.சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிகாந்துக்கு மட்டும்தான் சூட்டப்பட்டது. கலைப்புலி தாணு 38 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பட்டத்தைச் சூட்டினார். இந்திய சினிமாவில் பாகவதர், எம்ஜிஆர், சிவாஜி என எந்த உச்ச நட்சத்திரமும் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டதில்லை.


ஆனால் சமீப ஆண்டுகளில்தான் அந்தப் பட்டத்தை தங்கள் பெயருக்கு முன் போட்டுக் கொள்ள பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.


லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டவர் சிம்பு. அதை இப்போது யங் சூப்பர் ஸ்டார் என்று மாற்றியுள்ளார்.


ரஜினி ரசிகனாக அறிமுகமான அஜீத் ஒரு கட்டத்தில், சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு நான் ஆசைப்படுவது தப்பா? என்று கேட்டார் (ஆஞ்சநேயா). ஆனால் பின்னர் தன் பெயருக்கு முன் போட்டிருந்த அல்டிமேட் ஸ்டார் பட்டம் கூட வேண்டாம் என்றார்.


தளபதி ரஜினி, நான் அவருக்கு இளைய தளபதி என்று சொல்லிக் கொண்டு அறிமுகமான விஜய், நானே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஒரு கருத்துக் கணிப்பின் பேரால் நிலைநிறுத்த முயன்றார். ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக அமைதியாகிவிட்டார்.


இப்போது தனுஷை இளைய சூப்பர் ஸ்டாராக்கியிருக்கிறார்கள். கலாய்ப்பு மன்னன்கள் ஏரியாவில் கலாட்டா ஆரம்பித்துவிட்டது. நடத்துங்க!


English summary
At Thodari movie audio launch, Actor Thambi Ramaiya says that here after Dhanush must be called as Young Superstar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil