»   »  ஜி.வி.பிரகாஷின் 'சூப்பர் ஸ்டார்' பேச்சுக்கு தனுஷ் கொடுத்த பதிலடி!

ஜி.வி.பிரகாஷின் 'சூப்பர் ஸ்டார்' பேச்சுக்கு தனுஷ் கொடுத்த பதிலடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி.வி.பிரகாஷின் சூப்பர் ஸ்டார் பேச்சுக்கு நடிகர் தனுஷ் மறைமுக பதிலடி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

நேற்று நடிகர் விஜய் தன்னுடைய 42 வது பிறந்தநாளை 'விஜய் 60' படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

அவருக்கு தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான நடிக, நடிகையர் சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய வாழ்த்தில் ''தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்பதில் சந்தேகமில்லை'' என்று கூறி பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். ஜி.வி.பிரகாஷின் இந்த வாழ்த்தை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பலரும், பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

ஜி.வி.பிரகாஷின் வாழ்த்து விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்த அதே வேளையில், ரஜினி ரசிகர்கள் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை. விஜய்யை வாழ்த்த வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் ரஜினி இருக்கும் போது விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என வாழ்த்துவதா? என்று கேள்விகளை எழுப்பி அவரை வறுத்தெடுத்தனர்.

தனுஷ்

தனுஷ்

இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற லோகோவை கவர் போட்டோவாக வைத்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ், விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிய பின்புதான் தனுஷ் இந்தப் புகைப்படத்தை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பனிப்போர்

பனிப்போர்

தனுஷ்-ஜி.வி.பிரகாஷ் இருவருக்கும் நீண்ட நாட்களாக பனிப்போர் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிக்கை தனுஷிற்கு விருது கொடுத்தபோது இந்த விருது விஜய் அண்ணாவிற்குத் தான் செல்ல வேண்டும் என்று ஜி.வி.பிரகாஷ் சர்ச்சையைக் கிளப்பினார். இதனால் தான் வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் ஜி.வி.பிரகாஷுக்குப் பதில் சந்தோஷ் நாராயணனை படக்குழு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

English summary
Dhanush indirect Reply on G.V.Prakash Super Star Comment His Twitter Page.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil