ஹாலிவுட்டில் ஷூட்டிங் ஓவர்.. பாலிவுட் பட புரமோஷனுக்கு பறந்து வந்த தனுஷ்.. சும்மா மாஸ் காட்டுறாரு!
சென்னை: கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என மாஸ் காட்டி வருகிறார் நடிப்பு அசுரன் தனுஷ்.
இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் உருவாகி உள்ள பாலிவுட் படம் அட்ரங்கி ரே எனும் கலாட்டா கல்யாணம் படத்தின் புரமோஷன் மும்பையில் இன்று நடைபெற்றது.
ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு மும்பைக்கு பறந்து வந்துள்ளார் நடிகர் தனுஷ்.

ஆல் ஏரியா
கில்லி படத்தில் தளபதி விஜய் சொல்வது போல உங்க ஏரியா, எங்க ஏரியா, உங்க இடம், எங்க இடம் ஆல் ஏரியாவுலேயும் அய்யா கில்லி டா என்பது போல கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அசத்தி வருகிறார் அசுரன் தனுஷ். விரைவிலேயே டோலிவுட்டில் இயக்குநர் சேகர் கம்முலாவின் படத்தில் நடிக்க உள்ளார்.

ஹாலிவுட் படம்
நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் இயக்கத்தில் மார்வெல் நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் தி கிரே மேன் படத்தில் கோலிவுட் நடிகர் தனுஷும் ஒரு அங்கமாக நடித்து வருகிறார். அந்த படத்தின் பேட்ச் வொர்க்கிற்காக சமீபத்தில் ஹாலிவுட் சென்ற நடிகர் தனுஷ் அங்கே ஷூட்டிங்கை முடித்து விட்டு நாடு திரும்பி உள்ளார்.

கலாட்டா கல்யாணம்
அம்பிகாபதி படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் நடிகர் தனுஷ் நடித்துள்ள பாலிவுட் படம் தான் அட்ரங்கி ரே. தமிழில் கலாட்டா கல்யாணம் என டப்பிங் செய்யப்பட்டுள்ள அந்த படம் வரும் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீசாகிறது.

மும்பையில் புரமோஷன்
கலாட்டா கல்யாணம் படத்தின் புரமோஷன் இன்று மும்பையில் நடைபெற்றது. ஹாலிவுட்டில் ஷூட்டிங்கில் இருந்த நடிகர் தனுஷ் மும்பையில் நடைபெற்ற பட புரமோஷனில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சின்ன ரோல்
கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் தனுஷ் தான் ஹீரோ என்றும் தான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளதாக இன்று நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமார் பேசியது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார் அக்ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட படங்கள்
ராஞ்சனா, ஷமிதாப் படங்களை தொடர்ந்து அட்ரங்கி ரே என பாலிவுட்டில் மூன்றாவது படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தமிழ் சினிமா ரசிகர்களுக்காகவும் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். மாறன், திருசிற்றம்பலம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்கள் கைவசம் உள்ளன.


Click it and Unblock the Notifications











