»   »  தனுஷ் என் “நண்பன்” இல்லை... இப்படிச் சொல்வது சிவகார்த்திக்கேயன்

தனுஷ் என் “நண்பன்” இல்லை... இப்படிச் சொல்வது சிவகார்த்திக்கேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் என்னுடைய நண்பர் இல்லை. சீனியர். அதனாலேயே அவரிடமிருந்து கொஞ்சம் விலகியே இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திக்கேயன்.

மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக தன் வாழ்க்கையைத் தொடங்கி, சின்னத்திரைத் தொகுப்பாளராக மாறி இன்று தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்த நடிகர்கள் ஒருவர் என்ற சிறப்பும் சிவகார்த்திக்கேயனுக்கு உண்டு.

இதுவரை சிவகார்த்திக்கேயன் நடித்த படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் நடிகராக அவர் இருப்பதே இதற்குக் காரணம்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார் சிவகார்த்திகேயன். அப்போது அவர் பேசியதாவது:-

மெரீனா....

மெரீனா....

தமிழ் சினிமாவில் நான் அறிமுகமான ‘மெரீனா' படத்தில் என்னுடைய சம்பளம் ரூ.10 ஆயிரம்தான். ஆனால், கடைசி படத்திற்கு நான் வாங்கிய சம்பளம் ரூ.3 கோடிக்கும் மேல்.

நெருங்கிய தோழிகள்...

நெருங்கிய தோழிகள்...

அதேபோல், சினிமாவில் என்னுடைய நெருங்கிய தோழிகள் ஹன்சிகாவும், ஸ்ரீதிவ்யாவும்தான். அவர்கள்தான் என்னிடம் அடிக்கடி பேசி வருகிறார்கள்.

நண்பன் இல்லை...

நண்பன் இல்லை...

தனுஷ் எனக்கு நண்பன் இல்லை. ஒரு நண்பனாக நாம் யார் மேலாவது கை போட்டு பேசலாம். ஆனால், அவர் மீது அப்படி கைபோட்டு பேசமுடியாது.

என் சீனியர்...

என் சீனியர்...

ஏனென்றால், அவர் எனக்கு சீனியர். அதனாலேயே அவரிடமிருந்து கொஞ்சம் விலகியே இருக்கிறேன். அவர்மீது எனக்கு எப்போதுமே தனி மரியாதை இருக்கிறது. மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

ரொமான்டிக் படம்...

ரொமான்டிக் படம்...

நான் தொடர்ந்து பொழுதுபோக்கான திரைப்படங்களிலேயே நடிக்க ஆசைப்படுகிறேன். இப்போதைக்கு வேறு எந்த புது முயற்சியிலும் இறங்கப் போவதில்லை. என்னுடைய அடுத்த படம் ரொமான்டிக் காமெடியாக இருக்கும் என்று பேசினார்.

English summary
"Dhanush is more than a friend for me", said actor Sivakarthikeyan, while speaking in a event in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil