»   »  'கொடி'ய பறக்க விடுங்கப்பா!- ரசிகர்களிடம் 'சரண்டரான' தனுஷ்!! #dhanushkraja #Kodi

'கொடி'ய பறக்க விடுங்கப்பா!- ரசிகர்களிடம் 'சரண்டரான' தனுஷ்!! #dhanushkraja #Kodi

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொடரி படத்தின் தோல்வியும், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் வளர்ச்சியும் தனுஷை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறது.

இறங்கி வந்தால்தான் மரியாதை கிடைக்கும் என்பதை உணர்ந்து மீடியாக்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளார். ட்விட்டர் போதும் என்று முன்புபோல அல்லாமல் எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்துப் பேசுகிறார். இந்த மாற்றத்தின் அடுத்த கட்டமாக ரசிகர்கள் பக்கமும் தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.


Dhanush meets his fans to promote Kodi

ஒரு படத்தின் ஓப்பனிங் எனப்படும் முதல் இரண்டு நாட்களுக்கான கூட்டத்துக்கு ரசிக மன்றங்கள் மிக மிக அவசியம். அதில் கவனத்தை செலுத்தத் தொடங்கியிருக்கிறார் தனுஷ். தொடரி படத்தின் ஓப்பனிங்கை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.


முதல் கட்டமாக தமிழ்நாடெங்கும் இருக்கும் ரசிக மன்றங்களின் மாவட்ட செயலாளர்களை நேற்று அழைத்துப் பேசியிருக்கிறார். இதில் தீபாவளிக்கு வெளியாகும் கொடி படத்தை எந்த வகைகளில் புரமோஷன் செய்து ஹிட் ஆக்கலாம் என்று விவாதித்திருக்கிறார்களாம்.


என்ன செய்தாலும் படம் நல்லாருந்தாதான் ஓடும். இதை இந்த ஹீரோக்கள் எப்ப புரிஞ்சுக்க போறாங்களோ?

English summary
Sources say that Dhanush has invited all his fan club functionaries and requested to promote his Kodi movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil