»   »  வை ராஜா வை படத்தில் 'கொக்கி குமாரு' தனுஷை மீண்டும் பார்க்கலாம்!

வை ராஜா வை படத்தில் 'கொக்கி குமாரு' தனுஷை மீண்டும் பார்க்கலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொக்கி குமாரு... இது புதுப்பேட்டை படத்தில் தனுஷ் நடித்த பாத்திரத்தின் பெயர். ரொம்ப புகழ்பெற்ற வேடம்... படம்.

அந்த வேடம் தனுஷுக்கே ரொம்பப் பிடித்தது என்பதால், அதற்கு ஒரு தொடர்ச்சியை உருவாக்குமாறு முன்பே கோரியிருந்தார்.இப்போது அவர் ஆசை நிறைவேறியிருக்கிறது. அந்த கொக்கி குமார் வேடத்தில் மீண்டும் நடித்திருக்கிறார் தனுஷ்.


மனைவி ஐஸ்வர்யா இயக்கிவரும் வை ராஜா வை படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அந்த கொக்கி குமார் வேடத்தைத் தொடர்கிறாராம் தனுஷ்.


இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொக்கி குமாரை பார்க்கப் போகிறீர்கள். என் கணவர் நடித்ததிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த வேடம் கொக்கி குமார்தான். வை ராஜா வை படத்தில் தனுஷை அந்த வேடத்தில் பார்த்து ஆச்சர்யப்படுவீர்கள். நான் சொல்வதைவிட, அதை திரையில் நீங்கள் பார்க்க வேண்டும்...," என்றார்.


வரும் ஏப்ரல் 24-ம் தேதி வை ராஜா வை திரைக்கு வருகிறது. கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

English summary
Dhanush is playing as Kokki Kumar after 8 years in Aishwarya's Vai Raja Vai movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil