»   »  நல்லாருக்கு சிவா.. வாய் விட்டுப் பாராட்டிய தனுஷ்... சண்டை போச்!

நல்லாருக்கு சிவா.. வாய் விட்டுப் பாராட்டிய தனுஷ்... சண்டை போச்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நல்லா பண்ணியிருக்கீங்க சிவா என்று காக்கி சட்டை படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனைப் பாராட்டி இருக்கிறார் தனுஷ்.

தனுஷ் - சிவகார்த்திகேயன் இருவருக்கும் மோதல், சிவகார்த்திகேயனைப் பார்த்தவுடன் தனுஷ் எழுந்து போய்விட்டார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், தனுஷ் - சிவகார்த்திகேயன் நட்பில் முதிர்ச்சியே... விரிசல் அல்ல என்று அவர்களது நண்பர் அனிருத் விளக்கம் தந்தார்.


தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் 'காக்கி சட்டை' இப்படம் சிலதினங்களுக்கு முன் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டி இருக்கிறார் தனுஷ். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறியிருப்பது:


தனுஷ் பாராட்டு

தனுஷ் பாராட்டு

'காக்கி சட்டை' பார்த்துவிட்டு நல்லா பண்ணியிருக்கீங்க சிவா, நடிப்பில் நிறைய முன்னேற்றங்கள் இருக்கிறது என்று தனுஷ் சார் பாராட்டினார். 'எதிர் நீச்சல்' படத்துக்குப் பிறகு இப்போது தான் என் படத்தை பார்க்கிறார் தனுஷ்.


என் படம் பார்க்கவில்லை

என் படம் பார்க்கவில்லை

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மான் கராத்தே' இரண்டையும் தனுஷ் பார்க்கவில்லை. அந்த சமயத்தில் மும்பையில் இந்தி படப்பிடிப்பில் இருந்தார்.


நட்பில் விரிசல் இல்லை

நட்பில் விரிசல் இல்லை

எங்களுக்குள் முன்னாடி இருந்த நட்பு இப்போதும் அப்படியே இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது கூட அவருக்கு தெரியாது. முதல் நாள் பூஜை மற்றும் இப்போது படம் பார்த்திருக்கிறார். அவ்வளவு தான்.


தனுஷ் நம்பிக்கை

தனுஷ் நம்பிக்கை

ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு வரவில்லை. 'எதிர் நீச்சல்' பண்ணிய குழு, அதனால் எனக்கு கவலையில்லை என்று எப்போதும் சொல்வார்.


என்ன நான் சொல்வது

என்ன நான் சொல்வது

தனுஷ் சார் விஷயத்தில் எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இதற்கு மேல் என்ன பண்ண வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை.


ஜெமினி பாலத்தில் நடனமாடினால்

ஜெமினி பாலத்தில் நடனமாடினால்

என்னுடைய நட்பிற்குள் விரிசல் இல்லை என்று சொல்வது என் கடமை. அதுக்கு மேலும் நிரூபிக்க வேண்டுமானால், ஜெமினி பாலத்துக்கு நடுவில் நின்று இருவரும் இணைந்து நடனமாடினால் மட்டுமே நம்புவார்கள் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.


நாங்க நம்பிடுறோம்...தயவு செஞ்சு பாலத்துல ஏறி டான்ஸ் மட்டும் ஆடிடாதீங்க!English summary
Dhanush has praised Shivakarthikeyan for his acting in Kaakki Chattai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil