»   »  மாரி வசூலால் குஷி.. குழுவினருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்!

மாரி வசூலால் குஷி.. குழுவினருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாரி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், கமர்ஷியலாக அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான தனுஷ், மாரி குழுவுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்துள்ளார்.

தொன்னூறுகளிலிருந்து தன் படங்களில் பணியாற்றும் கலைஞர்களுக்கு தங்கச் சங்கிலி பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினிகாந்த்.


இப்போது அவரது மருமகன் தனுஷும் இதே வழியைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்.


காக்கா முட்டை குழுவுக்கும்

காக்கா முட்டை குழுவுக்கும்

சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியாகி பெரும் வெற்றியையும் ஏராளமான விருதுகளையும் குவித்த படம் காக்கா முட்டை. அந்தப் படத்தின் இயக்குநர், நடித்த இளம் சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து மகிழ்ந்தார் தனுஷ்.


மாரி

மாரி

அடுத்து தனுஷ் தயாரித்து, நடித்து வெளியாகியுள்ள மாரி படக் குழுவுக்கும் இதே போல தங்கச் சங்கிலி பரிசளித்துள்ளார்.


வசூல்

வசூல்

இந்தப் படம் குறித்து பலவிதமான விமர்சனங்கள் வந்தாலும், படம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமையும் நல்ல கூட்டத்துடன் ஓடுவதால் வசூல் திருப்திகரமாகவே உள்ளது.


தங்கச் சங்கிலி

தங்கச் சங்கிலி

இதனால் மகிழந்து போன தனுஷ் படத்தில் தன்னுடன் நடித்த ரோபோ சங்கர், வினோத், விஜய் யேசுதாஸ், இயக்குநர் பாலாஜி மோகன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தங்கச் சங்கிலி அணிவித்தார்.


உணர்ச்சிவசப்பட்ட விஜய் யேசுதாஸ்

உணர்ச்சிவசப்பட்ட விஜய் யேசுதாஸ்

இந்த தங்கச் சங்கிலி அணிவிக்கும் நிகழ்ச்சியின் போது உணர்ச்சிவசப்பட்ட விஜய் யேசுதாஸ், தனுஷின் காலில் விழ முயல, தனுஷ் தடுத்து வாழ்த்தினார். விஜய் யேசுதாசுக்கு நடிகராக இது முதல் படம். இந்த ஒரே படத்தின் மூலம் அவர் ரெகுலர் நடிகராகிவிட்டார். நிறைய வாய்ப்புகளும் வருகின்றனவாம்.


English summary
After the success of Maari movie, Dhanush has presented golden chains to his crew members including Robo Shankar, Vijay Yesudas and Anirudh.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos