»   »  தெலுங்கில் 'பாடகராக' அறிமுகமாகும் தனுஷ்

தெலுங்கில் 'பாடகராக' அறிமுகமாகும் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தமிழில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்த தனுஷ் தற்போது தெலுங்கிலும் பாடகராக அறிமுகமாகியிருக்கிறார்.

'கொடி', 'தொடரி' என 2 படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்க 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'வட சென்னை' போன்ற படங்களில் தனுஷ் பிஸியாக நடித்து வருகிறார்.

Dhanush's Tollywood Entry

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் கேட்டுக் கொண்டதற்காக தெலுங்கில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் தனுஷ். படத்தின் பெயர் 'திக்கா' தெலுங்கின் இளம் நடிகர் சாய் தரண் தேஜ் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மன்னாரா சோப்ராவும் நடித்திருக்கின்றனர்.

இதில் இடம் பெறும் திக்கா பேபி என்னும் பாடலை தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய தமன் தனுஷை அணுகியிருக்கிறார். பாடுவதற்கு சம்மதம் சொன்ன தனுஷ் சொன்னபடி 25 நிமிடங்களில் முழுப் பாடலையும் பாடிக்கொடுத்து விட்டாராம்.

இதுகுறித்து இசையமைப்பாளர் தமன் ''தொழில்முறை பாடகரைப் போல தனுஷ் அசத்தி விட்டார்'' என்று தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வருகின்ற 30ம் தேதி நடைபெறவுள்ளது.

English summary
Actor Dhanush Sing a Song in Sai Dharam Tej's Thikka Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil