»   »  இந்தியில் ரீமேக் ஆகும் ‘அக்னி நட்சத்திரம்’... கார்த்திக் வேடத்தில் தனுஷ்?

இந்தியில் ரீமேக் ஆகும் ‘அக்னி நட்சத்திரம்’... கார்த்திக் வேடத்தில் தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் பெரும் வெற்றி பெற்ற மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில், தமிழில் கார்த்திக் நடித்த வேடத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1988ம் ஆண்டு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய தமிழ்ப் படம் அக்னி நட்சத்திரம். மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், பிரபு, அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜெயசித்ரா, சுமித்ரா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

இருதார மகன்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களைக் கொண்டது இப்படத்தின் கதைக்களம். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்.

இந்தியில் ரீமேக்...

இந்தியில் ரீமேக்...

இந்நிலையில் தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. தமிழில் விக்ரம், ஜீவா நடிப்பில் வெளியான டேவிட் என்ற படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் தான் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்.

விக்கி விலகல்...

விக்கி விலகல்...

முதலில் இப்படத்தில் கார்த்திக், பிரபு கதாபாத்திரங்களில் விக்கி கவுசல் மற்றும் ஹர்சவர்தன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து விலகினார் விக்கி.

தனுஷ்...

தனுஷ்...

இதனால் தற்போது விக்கி நடிக்க இருந்த கார்த்திக் கதாபாத்திரத்தில் தனுஷை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என தனுஷ் கூறியதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பு நல்ல கதாபாத்திரம் என்பதால், ரீமேக்கில் நடிப்பது குறித்து அவர் யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படக்குழு விருப்பம்...

படக்குழு விருப்பம்...

அதோடு இந்தியில் நடிப்பது தனுஷிற்கு புதிதல்ல. ஏற்கனவே அவர் சில இந்திப் படங்களில் நடித்துள்ளார். எனவே, அக்னி நட்சத்திரம் ரீமேக்கில் அவரை நடிக்க வைக்க படக்குழு விரும்புவதாகத் தெரிகிறது.

விரைவில் ஷூட்டிங்...

விரைவில் ஷூட்டிங்...

இது குறித்து பிஜாய் நம்பியார் கூறுகையில், 'அக்னி நட்சத்திரம்' படத்தை இந்தியில் ரீமேக் செய்வது உண்மைதான். விரைவில் இப்படதிற்க்கான படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. விக்கி இதில் நடிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
The 1998 Manirathnam classic ‘Agni Natchathiram’ is being remade in Hindi by Bejoy Nambiar who directed the Vikram-Jiiva starrer ‘David’. It is reported that Bejoy is in talks with Dhanush to star in the as yet untitled film for which he has said to have given the nod.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil