என்னது ஃபோட்டோ எடுக்கலையா?.. சொந்த ஊர் மக்களுக்கு இட்லி கடை தனுஷ் என்ன செஞ்சிருக்காரு பாருங்க!

சென்னை: தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் இட்லி கடை திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதால் அவர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலைமையில் தனது குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் நேற்று சென்றார் அவர். இந்நிலையில் ஊர் மக்களுக்கு கிடா வெட்டி விருந்தும் வைத்திருக்கிறார்.

தனுஷ் இந்திய அளவில் பிரபலமான நடிகர். இரண்டு தேசிய விருதுகளை அள்ளியிருக்கும் அவர் இப்போது இயக்குநராகவும் ஜொலித்துவருகிறார். பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக இயக்கினார். இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்தன. அதனைத் தொடர்ந்து இட்லி கடை படத்தை இயக்கியிருக்கிறார்.

ரிலீஸான இட்லி கடை: இதில் அவருடன் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய் என பலர் நடித்திருக்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதமே படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த மாதத்துக்கு தள்ளி வந்தது. அறிவித்தபடி சில நாட்களுக்கு முன்பு பிரமாண்டமாக ரிலீஸானது. தனுஷின் இயக்கம் என்பதாலும்; அவருக்கு இப்போது ஒரு ஹிட் கண்டிப்பாக தேவைப்படுவதாலும் இப்படத்தின் மீது அவரது ரசிகர்கள் ஹைப்பை வைத்திருந்தார்கள்.

Dhanush slaughters a goat and hosts a feast for his hometown people

நல்ல ரெஸ்பான்ஸ்: படத்தை பார்த்த ரசிகர்களுக்கு படம் பெரிய திருப்தியை கொடுத்திருக்கிறது. திரைக்கதை, மேக்கிங் என அனைத்திலும் படம் பக்காவாக வந்திருப்பதாகவும்; தனக்குள் ஒரு கைதேர்ந்த இயக்குநர் இருக்கிறார் என்பதை அவர் நிரூபித்துவிட்டார் என்றும் ரசிகர்கள் கூறினார்கள். இதுவரை இப்படம் 35 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. போட்டிக்கு வந்த காந்தாரா படத்துக்கு இட்லி கடை செம டஃப் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

குடும்பத்துடன் தனுஷ்: இட்லி கடை படத்தின் வெற்றி அவருக்கு ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. ஏனெனில் தான் சிறு வயதில் சொந்த ஊரில் பார்த்தவர்கள், பார்த்த சம்பவங்களை அடிப்படையாக வைத்துதான் இக்கதையை எழுதியிருக்கிறார். படம் இப்போது சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருப்பதால் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான சங்கராபுரத்தில் இருக்கும் குல தெய்வ கோயிலுக்கு நேற்று சென்றார் தனுஷ். சொந்த ஊருக்கு வந்த தனுஷுக்கு பலமான வரவேற்பு கிடைத்தது.

கிடா வெட்டி விருந்து: அதேசமயம் அடிக்கடி ஊருக்கு வரும் தனுஷ் தங்களுடன் நின்று ஒரு ஃபோட்டோகூட எடுத்துக்கொள்வதில்லை என்று ஊர் மக்கள் கூறினார்கள். இந்நிலையில் குல தெய்வ கோயிலில் வழிபாட்டினை முடித்துவிட்டு சொந்த ஊர் மக்களுக்கு கிடா வெட்டி விருந்து அளித்திருக்கிறார். இந்த விருந்தில் ஊர்க்காரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாப்பிட்டு மகிழ்ந்தார்கள். மேலும் ஃபோட்டோ எடுக்காவிட்டாலும் எங்கள் வயிறை நிறைய வைத்துவிட்டார் தனுஷ் என்று வாழ்த்தியும் சென்றார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X