ஐதராபாத் மிலிட்ரி ஓட்டலில் சாப்பிட்ட தனுஷ்...கூட இருக்க பொண்ணு யாரு...தீயாய் பரவும் போட்டோ
ஐதராபாத் : கடந்த ஒரு மாதமாக தலைப்புச் செய்திகளில் அடிப்படும் பெயராக மாறி உள்ளார் நடிகர் தனுஷ். மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை பிரிவதாக தனுஷ் அறிவித்தது முதலே தனுஷ் பற்றிய ஏதாவது ஒரு தகவல் வந்து, பரபரப்பாகி வருகிறது.
சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்ற நானே வருவேன் ஷுட்டிங்கின் போது தனுஷின் மூத்த மகன் யாத்ரா சென்று தனது அப்பாவை சந்தித்த போட்டோக்கள் வெளியாகி தீயாய் பரவின. இந்த போட்டோவை தனுஷ் பகிர்ந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக 3 லட்சம் பேர் லைக் செய்தனர்.

வரிசையாக காத்திருக்கும் படங்கள்
தனுஷ் நடித்துள்ள மாறன் படம் ரிலீசிற்காக காத்திருக்கிறது. இதே போல் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படமும் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதோடு திருச்சிற்றம்பலம் படமும் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதன் டப்பிங் பணிகள் துவங்கி உள்ளதாக சமீபத்தில் டைரக்டர் மித்ரன் ஜவஹர் கூறி இருந்தார்.

வாத்தி ஷுட்டிங்கில் பிஸியான தனுஷ்
இந்நிலையில் தனுஷ் தற்போது நடித்து வரும் பைலிங்குவல் படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் நடக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் வெங்கி அட்லுரி இயக்கும் இந்த படத்தில் சம்யுக்தா மேனன் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஐதராபாத் மிலிட்ரி ஓட்டலில் தனுஷ்
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாத்தி ஷுட்டிங்கிற்கு இடையே ஐதராபாத்தில் உள்ள 1980 மில்ட்ரி ஓட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட, சாதாரண உடையில் சென்றுள்ளார் தனுஷ். கருப்பு நிற உடையில், கருப்பு தொப்பி அணிந்து சாதாரண வாடிக்கையாளரை போல் சென்று, உணவு சாப்பிட்டுள்ளார். அங்கிருந்த ஓட்டல் பணியாளர்கள் தனுஷை அடையாளம் கண்டுபிடித்து, தனுஷ் சாப்பிடுவதை போட்டோ எடுத்துள்ளனர்.

யாரு பார்த்த வேலைடா இது
ஓட்டல் விளம்பரத்திற்காக தனுஷ் சாப்பிட்ட போட்டோ எடுத்து, சர்ப்ரைஸ் கெஸ்டாக வந்த தனுஷிற்கு உணவு வழங்கியதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டு சோஷியல் மீடியாவில் பரவ விட்டுள்ளனர். இந்த போட்டோ தற்போது தீயாய் பரவி வருகிறது. ஆனால் வழக்கம் போல் இந்த போட்டோவையும் வைத்து கொளுத்தி போட்டுள்ளனர் சில நெட்டிசன்கள்.
Recommended Video

கூட இருக்க பொண்ணு யாரு
எளிமையாக, அமைதியாக, சாதாரண மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட தனுஷை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், நெட்டிசன்கள் சிலர் தனுஷ் அருகே அமர்ந்து சாப்பிட்ட இளம்பெண் ஒருவரை வைத்து, தனுஷுடன் சாப்பிடும் அந்த பெண் யார் என வழக்கம் போல் கொளுத்தி போட்டுள்ளதால் இந்த போட்டோ மற்றொரு பரபரப்பை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications