»   »  மாமா ரஜினி அவ்வளவு சொல்லியும் பேச்சை கேட்காத தனுஷ்?

மாமா ரஜினி அவ்வளவு சொல்லியும் பேச்சை கேட்காத தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ப. பாண்டி ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுத துவங்கிவிட்டார் தனுஷ் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியராக இருந்த தனுஷுக்கு தனது தந்தை, அண்ணனை போன்று இயக்குனராகும் ஆசை வந்தது. இதையடுத்து அவர் ப. பாண்டி படத்தை இயக்கி வெளியிட்டார்.


ப. பாண்டி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.


மகிழ்ச்சி

மகிழ்ச்சி

முதல் படத்திலேயே அசத்திட்டீங்க போங்க என்று ரசிகர்கள் இயக்குனர் தனுஷை பாராட்டினார்கள். திரையுலக பிரபலங்களும் தனுஷை பாராட்டினார்கள். இயக்குனர்கள் தனுஷை இயக்குனர்கள் கூட்டத்தில் மகிழ்ச்சியோடு சேர்த்துக் கொண்டார்கள்.


ப. பாண்டி

ப. பாண்டி

ப. பாண்டி ஹிட்டாகிவிட்டது அதன் இரண்டாம் பாகத்தை இயக்குவீர்களா என்று தனுஷிடம் கேட்கப்பட்டது. இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளது ஆனால் எப்பொழுது என்று தெரியாது என தனுஷ் தெரிவித்தார்.


ப. பாண்டி 2

ப. பாண்டி 2

இரண்டாம் பாகத்தை எடுக்க அவசரப்படவில்லை என்று தெரிவித்த தனுஷ் ஏற்கனவே ப. பாண்டி 2 திரைக்கதையை எழுதத் துவங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ரஜினி

ரஜினி

ப. பாண்டி படத்தை பார்த்த ரஜினிகாந்த் தனது மருமகனிடம் கூறியதாவது, தனுஷ் ஒரு படம் இயக்கினாலும் அது சரித்திரத்தில் இடம் பெற்ற படம் என்று வரலாறு உங்களை பற்றி பேசும். அதனால் அடுத்தடுத்து படம் இயக்கி அந்த படத்தின் மதிப்பை இழக்க வேண்டாம் என்றார்.


தனுஷ்

தனுஷ்

ப. பாண்டி இரண்டாம் பாகத்தில் தனது மாமனார் ரஜினிகாந்தையே ஹீரோவாக நடிக்க வைக்கும் திட்டமும் உள்ளதாம் தனுஷிடம். மாமனார் படத்தை தயாரிப்பதை அடுத்து இயக்கவும் விரும்புகிறாராம் தனுஷ்.


English summary
According to reports, director Dhanush has already started writing script for Pa. Paandi 2 after his directorial debut is a hit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil