»   »  மாமா எது செய்தாலும் அது சரியாகத் தான் இருக்கும்: ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனுஷ்

மாமா எது செய்தாலும் அது சரியாகத் தான் இருக்கும்: ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி எந்த முடிவு எடுத்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


அப்போது தான் அரசியலுக்கு வருவது குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசினார்.


கட்சிகள்

கட்சிகள்

அரசியலுக்கு வாங்க வாங்க என்று கட்சியினர் அழைத்தபோது எல்லாம் ரஜினி கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அரசியலுக்கு வருவது குறித்து அவராக பேசியது பலரையும் வியக்க வைத்துள்ளது.


தனிக்கட்சி

தனிக்கட்சி

ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க சில கட்சிகள் திட்டம் தீட்டின. ஆனால் ரஜினியோ எந்த கட்சியிலும் சேராமல் புதுக்கட்சி துவங்கப் போவதாக கூறப்படுகிறது.


ரஜினி

ரஜினி

நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி பளிச்சென்று சொல்லவில்லை. ஆனால் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருகிறார் என அவரின் நெருங்கிய நண்பரான ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.


தனுஷ்

தனுஷ்

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரின் மருமகனும், நடிகருமான தனுஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, தலைவர் எந்த முடிவு எடுத்தாலும் சரியாகத் தான் இருக்கும். அரசியல் பேச்சால் குடும்பத்தில் என்த பிரஷரும் இல்லை என்றார்.


English summary
Dhanush said that whatever decisions Rajaini take, it will always be right. There is no pressure in the family about his political speech, he added.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil