நம்பவே முடியல என்னால...ஆச்சரியத்துடன் நன்றி சொன்ன தனுஷ்

சென்னை : தனுஷ் திரையுலகிற்கு அறிமுகமாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகி விட்டது. இதற்காக நன்றி சொல்லி கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்படி யாருக்கெல்லாம் தனுஷ் நன்றி கூறி இருக்கிறார் என பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல திறமைகளைக் கொண்டவர் தனுஷ். டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், 2002 ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராகவும், ஹீரோவாகவும் தனது தந்தை கஸ்தூரிராஜாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

தனுஷ் பெற்ற விருதுகள்

தனுஷ் பெற்ற விருதுகள்

இதுவரை 46 படங்களில் நடித்துள்ள தனுஷ், 4 முறை தேசிய விருது வாங்கி உள்ளார். இரண்டு முறை சிறந்த நடிகருக்காகவும், இரண்டு முறை சிறந்த தயாரிப்பாளருக்காகவும் தேசிய விருது வாங்கி உள்ளார். இது தவிர ஃபிலிம்ஃபேர், எடிசன், சைமா உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் தனுஷ். பவர் பாண்டி படத்தின் மூலம் டைரக்டராகவும் அறிமுகமானார். 3 படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.

தனுஷிற்கு குவியும் வாழ்த்துக்கள்

தனுஷிற்கு குவியும் வாழ்த்துக்கள்

தனுஷ், சினிமாவிற்கு நடிக்க வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பலரும் அவருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்தனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தனுஷ். அவரின் இந்த கடிதத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

என்னால நம்பவே முடியல

என்னால நம்பவே முடியல

தனுஷ் தனது கடிதத்தில், நான் திரையுலக பயணத்தை துவக்கி 20 வருடங்கள் ஆகி விட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. காலம் ஓடிவிட்டது. கடவுளின் கருணையால் நான் துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்கும் போது இவ்வளவு தூரம் வருவேன் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. எனது ரசிகர்களின் அன்பும் ஆதரவும் இல்லை என்றால் என்னால் இதை நினைத்து கூட பார்க்க முடியாது. நீங்கள் தான் என் பலத்தின் தூண்கள். ஐ லவ் யூ ஆல்.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

என் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பிற்காக இந்த உலகம் முழுவதும் வாழும் சினிமா பிரியர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரஸ், மீடியா, டிவி சேனல்கள் மற்றும் சோஷியல் மீடியா ஆதரவாளர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னுடன் பணியாற்றிய டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. கேமிராவிற்கு பின் இருந்து பணியாற்றி அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், என்னுடன் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி.

கடைசியில எதுக்கு அந்த வார்த்தை

கடைசியில எதுக்கு அந்த வார்த்தை

என்னுடைய சகோதரர் மற்றும் குரு செல்வராகவனுக்கு என்னுடைய நன்றி. ஏன் என உங்கள் அனைவருக்கும் தெரியும். எனக்குள் இருந்த நடிகனை அடையாளம் காட்டிய என் அப்பா கஸ்தூரி ராஜாவிற்கு என்னுடைய நன்றி. கடைசியாக என்னுடைய அம்மாவிற்கு நன்றி. தினமும் அவர் செய்யும் பிரார்த்தனை தான் என்னை பாதுகாத்து இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. அவர் இல்லை என்றால் நான் ஒன்றுமே இல்லை என குறிப்பிட்டுள்ள தனுஷ், எண்ணம் போல் வாழ்க்கை என்ற வாசகத்துடன் முடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X