அட கொடுமையே...தனுஷ் ஏன் இப்படி ஆகிவிட்டார்...பொங்கும் ரசிகர்கள்

சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை போல் தனுஷும் நீண்ட இடைவேளைக்கு பிறகு டைரக்ஷனில் இறங்க போவதாக கூறப்படுகிறது. அதுவும் காமெடி படம் இயக்க போகிறாராம். இதை விட இந்த படத்தில் ஹீரோ யார் என்பது தான் அனைவரையும் மெர்சல் ஆக வைத்துள்ளது.

நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட், கோலிவுட் என வரிசையாக பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். வரிசையாக இவர் நடிக்கும் படங்கள் ஃபிளாப் ஆன போதிலும் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் மீண்டும் டைரக்ஷனை துவக்கவும் தனுஷ் திட்டமிட்டிருக்கிறாராம்.

டைரக்டரான தனுஷ்

டைரக்டரான தனுஷ்

2017 ம் ஆண்டு ரிலீசான பவர்பாண்டி படத்தின் மூலம் டைரக்டரானார் தனுஷ். ராஜ்கிரண், ரேவதி நடித்த படம் வயதான காலத்தில் வரும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படம் செம ஹிட்டாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதெல்லாம் எப்போ நடந்தது

இதெல்லாம் எப்போ நடந்தது

இதைத் தொடர்ந்து நாகர்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சரத்குமார், அதிதி ராவ் ஹத்ரி ஆகியோரை வைத்து மற்றொரு படத்தை எடுத்தார் தனுஷ். தேனாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரித்த இந்த படத்தின் ஷுட்டிங் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.

அட கொடுமையே

அட கொடுமையே

இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய நடிகர் ரோபோ ஷங்கர், தனுஷ் இயக்க போகும் படத்தில் தான் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறினார். அதோடு தன்னுடன் காமெடியன் ராமரும் இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறினார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என்ற தகவலையும் கூறினார்.

தனுஷ் ஏன் இப்படி ஆகிட்டார்

தனுஷ் ஏன் இப்படி ஆகிட்டார்

இந்த படத்திற்கான வேலைகளை தனுஷ் ஏற்கனவே துவங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஷுட்டிங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த தகவல் உண்மை தானா...தனுஷ் டைரக்ஷனுக்கு திரும்புவதாக இருந்தாலும், காமெடி படமாகவே இருந்தாலும் ரோபோ ஷங்கர், ராமரை ஹீரோவாக வைத்து படம் எடுக்கவா யோசிப்பார் என பல சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

ஒருவேளை அப்படி இருக்குமோ

ஒருவேளை அப்படி இருக்குமோ

மற்றொரு புறம் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி/சார் என வரிசையாக ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் டைரக்ஷனில் அவரால் எப்படி கவனம் செலுத்த முடியும். ஒருவேளை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ளதால் இவரும் போட்டிக்கு ஏதாவது செய்கிறாரோ என்றெல்லாம் கோலிவுட்டில் கிசுகிசுக்கள் பரவ துவங்கி விட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X