ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளர்களுடன் கைகோர்க்கும் தனுஷ்...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சென்னை : தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. சேகர் கம்முல்லா இயக்கும் இந்த படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திருச்சிற்றம்பலம், செல்வராகவனுடன் நானே வருவேன், ராம் குமார் இயக்கும் பெயரிடப்படாத படம், பாலிவுட்டில் Atrangi Re, ஹாலிவுட்டில் தி கிரே மேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கிலும் பல படங்களில் நடிக்க தனுஷ் கமிட் ஆகி உள்ளாராம். சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் மட்டுமில்லை, மொத்தம் 4 படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் ஆகி உள்ளாராம். அதுவும் பெரிய தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
சேகர் கம்முல்லா படத்தில் நடிக்க தான் முதலில் தனுஷ் ஒப்பந்தமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை நாராயணன் தாஸ் கே நாரங், புஷ்கர் ராம் மோகன் ராவ்வின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.
இதைத் தொடர்ந்து வெங்கி அட்லுரி இயக்கும் படம், மிஸ்டர் மஜ்னு படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் படம் என கூறப்பட்டது. தற்போது, ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி என்டர்டைன்மென்ட் மற்றும் மைத்ரி மூவி மேக்கஸ் தயாரிக்கும் 2 தெலுங்கு படங்களில் நடிக்கவும் தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.
தெலுங்கில் மட்டும் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் 4 படங்களில் நடிக்க தனுஷ் கமிட்டாகி உள்ளது, தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இதோடு புதிதாக படம் ஒன்றையும் தனுஷ் இயக்க போவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.
தற்போது நடித்த வரும் மாறன், திருச்சிற்றம்பலம் படங்களை முடித்த பிறகு சேகர் கம்முல்லா இயக்கும் படத்தின் வேலைகளை தனுஷ் துவக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











