»   »  நானும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்: அட்டன்டன்ஸ் போட்ட தனுஷ்

நானும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்: அட்டன்டன்ஸ் போட்ட தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்கள்.

Dhanush too supports Jallikattu

இதற்கிடையே திரையுலக பிரபலங்களும் ஒவ்வொருவராக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதில் லேட்டஸ்ட் நடிகர் தனுஷ். ஜல்லிக்கட்டு குறித்து தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளத்தின் முக்கிய அங்கம். #ISupportJallikattu #WeNeedJallikattu #TamilCulture என ட்வீட்டியுள்ளார்.

தமிழர்களின் விளையாட்டை பற்றி பேசும்போது தமிழில் ட்வீட்டலாமே. முன்னதாக ஜல்லிக்கட்டு மனிதாபிமானமற்றது அதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என தனுஷ் கூறியதாக கடந்த ஆண்டு செய்திகள் வெளியாகின. இதை பார்த்து பலரும் கொந்தளிக்க தனுஷ் பயந்துபோய் அது நான் இல்லீங்கோ யாரோ கிளப்பிய வதந்தி என்று விளக்கம் அளித்தார்.

இருப்பினும் அவர் பேச்சை பலர் நம்பவில்லை. காரணம் அவரது தோழி த்ரிஷா பீட்டாவில் இருப்பது.

English summary
Dhanush tweeted that, '#Jallikattu is an integral element of the voice and identity of Tamilians. #ISupportJallikattu #WeNeedJallikattu #TamilCulture'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil