»   »  ‘ஆசிர்வதிக்கப்பட்டேன்’... பிறந்தநாளில் ‘மாமனார்’ ரஜினியுடன் போட்டோ போட்ட "மாப்பிள்ளை"!

‘ஆசிர்வதிக்கப்பட்டேன்’... பிறந்தநாளில் ‘மாமனார்’ ரஜினியுடன் போட்டோ போட்ட "மாப்பிள்ளை"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக, தனது மாமனார் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் நேற்று தனது 33வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனுஷின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் ரத்ததான முகாம், அன்னதானம் உள்ளிட்டவற்றை நடத்தி கோலாகலமாகக் கொண்டாடினர்.

இந்நிலையில் தன் பிறந்தநாள் ஸ்பெஷலாக சிலப் புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தனுஷ்.

ஆசிர்வதிக்கப்பட்டேன்...

அதில் முக்கியமானது தனது மாமனாரும், சூப்பர்ஸ்டாருமான ரஜினியுடன் எடுத்துக் கொண்டது. அந்தப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால், ‘ஆசிர்வாதங்கள்... ஆசிர்வதிக்கப் பட்டேன்' என்ற பதிவுடன் அதனை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

பெற்றோரின் ஆசிர்வாதம்...

மற்றொரு பதிவில், ‘எனது பிறந்தநாள் அப்பா, அம்மா ஆசிர்வாதங்களுடன் தொடங்கி, ஆசிர்வாதங்களுடன் முடியும்' எனக் கூறி இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் உதவிகள்...

ரசிகர்களின் உதவிகள்...

அதுமட்டுமின்றி தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த நற்பணிகளை புகைப்படங்களுடன் ரீடிவிட் செய்துள்ளார் தனுஷ். நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம், ரத்ததானம் உள்ளிட்ட நற்காரியங்களைச் செய்துள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.

நன்றி...

நன்றி...

பிறந்தநாளை முன்னிட்டு தன்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகளைக் கூறவும் தனுஷ் மறக்கவில்லை. ரசிகர்களின் அன்பில், வாழ்த்துக்களில் தான் மனம் மகிழ்ந்து போனதாக ஒரு பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Dhanush published his photo with father in law Rajinikanth in twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil