மனுஷனா? மிஷினா? அடுத்த மாசம் ஒரு படம்.. பிப்ரவரி மாசம் இன்னொரு படமா? தனுஷ் வேகத்திற்கு சிம்பு வருவாரா?

சென்னை: நடிகர் தனுஷ் விவாகரத்துக்குப் பிறகு ஜெட் வேகத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்தும் இயக்கியும் தீயாக வேலை செய்து கோலிவுட்டையே திகைக்க வைத்துள்ளார். அதே வேகத்தை நடிகர் சிம்புவிடமும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவரும் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து உழைக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம்.

சினிமாவுக்கு சின்சியராக இல்லைன்னா சினிமா உங்களை தூக்கி எறிந்துவிடும் என சொன்ன ஷங்கரையே சினிமா ஓரங்கட்டி விட்டது. அதற்கு காரணம் அவரது கவனக்குறைவு தான் என்கின்றனர்.

Dhanush working like a machine Will Simbu give same kind of energy for his hardcore fans
Photo Credit:

இதே நிலைமை பல முன்னணி நடிகர்களுக்கும் வந்துக் கொண்டிருக்கிறது. பெரிய இடம் ரசிகர்கள் பட்டாளம் கிடைத்து விட்டால் மட்டும் போதாது என்றும் தொடர்ந்து அதை தக்க வைக்க கடினமாக உழைக்க வேண்டும் என்பதை பல ஹீரோக்கள் புரிந்துக் கொண்டனர்.

தீயாக வேலை செய்யும் தனுஷ்: நடிகர் தனுஷ் குறித்து தேவையற்ற வதந்திகள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் நடிகைகளுடன் கும்மாளம் போடுகிறார் என்றும் காதலில் விழுந்து விட்டார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பினாலும் மனுஷன் உண்மையாகவே மிஷின் போல சின்சியராக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பது இந்த ஆண்டு வெளியான படங்கள் மூலமே தெரிந்துக் கொள்ளலாம். ராயன் படத்தை இயக்கி நடித்த தனுஷ், அதனை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வெளியிட்டார். சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான குபேரா படத்தில் அச்சு அசல் பிச்சைக்காரர் போலவே தனுஷ் நடித்து வியக்க வைத்தார். இந்த வாரம் வெளியான இட்லி கடை திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் காந்தாரா சாப்டர் 1 படத்துடன் கடுமையாக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் தேரே இஷ்க் மே எனும் இந்தி படம் வெளியாகிறது.

Dhanush working like a machine Will Simbu give same kind of energy for his hardcore fans

மாஸ்டர் பிளான்: சூர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இயக்குநர்களை தேர்வு செய்வதில் ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், போர் தொழில் இயக்குநர், அமரன் பட இயக்குநர், லப்பர் பந்து இயக்குநர் என வரிசையாக யங் டேலண்ட் இயக்குநர்களுடன் படம் பண்ணுவது என வரிசையாக கமிட்டாகி வேக வேகமாக படங்களை முடித்துக் கொடுத்தும் வருகிறார் தனுஷ்.

விக்னேஷ் ராஜா படமும் ரெடி: இட்லி கடை படத்தை இயக்கி நடித்த தனுஷ் அதே நேரத்தில் இந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவான தேரே இஷ்க் மே படத்திலும் நடித்து முடித்து நவம்பர் மாதம் அந்த படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். இந்நிலையில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாக ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார். மேலும், படம் வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்து தனுஷ் ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளார்.

Dhanush working like a machine Will Simbu give same kind of energy for his hardcore fans
Photo Credit:

தாமதமாகும் சிம்பு பட ப்ரோமோ: நடிகர் சிம்பு தேசிங் பெரியசாமி இயக்கத்தில் பிரமாண்ட படத்தில் நடிக்க நீண்ட முடியை வைத்துக் கொண்டு 2 ஆண்டுகள் சுற்றிக் கொண்டு இருந்தார். ஆனால், கடைசியில் அந்த படம் ஆரம்பிக்காத நிலையில், பார்க்கிங் பட இயக்குநருடன் ஒரு படம் பண்ணுவதாக ஆரம்பித்தார். அந்த படமும் டிராப் ஆகிவிட்டது. கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை யூனிவர்ஸுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார் சிம்பு. அந்த படத்தின் ப்ரோமோ எப்போ வெளியாகும் என்றே ரசிகர்கள் பல நாட்கள் காத்துக் கிடக்கின்றனர். வெற்றிமாறன் சிம்பு படத்தை முடிக்கவே ஒரு வருஷத்துக்கும் மேல் எடுத்துக் கொள்வார் என்றும் தனுஷ் அளவுக்கு சிம்பு வேகம் காட்ட வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X