Don't Miss!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Technology
Oneplus Nord 2T 5G வந்தாச்சு: பட்ஜெட் விலையில் நச்சுனு அம்சம்- கொடுக்குற காசுக்கு தகுமா?
- News
வருமான வரித்துறையிடம் எனக்கு லவ் லெட்டர் வந்திருக்கிறது.. ஐடி நோட்டீஸ் குறித்து சரத்பவார் கிண்டல்
- Lifestyle
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- Finance
பிளாஸ்டிக் தடையால் அடித்தது ஜாக்பாட்: ஆனால் காத்திருக்கும் மிகப்பெரிய சவால்!
- Automobiles
ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தனுஷுக்கு வந்த புது சிக்கல்… தயாரிப்பு நிறுவன யூடியூப் பக்கம் முடக்கம்!
சென்னை : தனுஷின் தயாரிப்பு நிறுவன யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.
நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பலத்திறமைகளைக் கொண்டவர் தனுஷ். இவர் தனது தந்தை இயக்கத்தில் உருவான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதையடுத்து, தனது அண்ணன் இயக்கத்தில் உருவான காதல் கொண்டேன் திரைப்படத்தில் வினோத் என்று கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தனுஷின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படம் என்றால் அது காதல் கொண்டேன் தான்.
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மார்வெல் நடிகைக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை.. ஷாக்கில் ஹாலிவுட்!

தனுஷ்
பாலிவுட் ,ஹாலிவுட், டோலிவுட்,கோலிவுட் என அனைத்திலும் தடம் பதித்து திரை உலகையே மிரட்டி வருகிறார். தற்போது, தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். தனுஷூக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் சுவிஸ் நாட்டை சேர்ந்த எல்லி ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பல படங்களில் பிஸி
இதையடுத்து, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம்,வாத்தி, தி க்ரே மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தனுஷ், ராம்குமாரின் வால் நட்சத்திரம், மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளார். ரூஸோ சகோதரர்கள் இயக்கும் தி க்ரே மேன் படமும் நெட்ஃப்ளிக்ஸில் வரும் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகிறது.

கட்டாயத்தில் தனுஷ்
தனுஷ் நடித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியாக ஜகமே தந்திரம், மாறன், அட்ராங்கிரே போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், திருச்சிற்றம்பலம் படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், அடுத்து வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறார் தனுஷ்.

தனுஷூக்கு வந்த சிக்கல்
இந்நிலையில், தனுஷ் மற்றுமொரு புதிய சிக்கலில் சிக்கி உள்ளார். அதாவது தனுஷின் wunderbar films நிறுவனத்தின் யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் பல கோடி சாதனைகளை படைத்தது. அந்த பாடலையும் சேர்த்து தனுஷின் தயாரிப்பு நிறுவன யூடியூப் சேனலையும் மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இது தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. யூடியூப் சேனலை மீட்கும் நடவடிக்கையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் இறங்கி உள்ளது.