»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் கொண்டேனை தொடர்ந்து தனுசின் காட்டில் அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10படங்கள் கையில் வைத்திருக்கிறார். தினமும் யாராவது ஒரு தயாரிப்பாளராவது வீட்டுக்கு வந்து அட்வான்ஸைக்கொடுக்க தவம் கிடக்கிறார்.

ஆனால், தன்னால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கால்ஷீட் தர முடியாது என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பஆரம்பித்திருக்கும் தனுஷ் இந்தத் தயாரிப்பாளர்கள் தொல்லையில் இருந்து தப்ப தனது ரேட்டையும்அநியாயத்துக்குக் கூட்டியிருக்கிறார்.

சமீபத்தில் திடீரென தனுஷைத் தேடி வந்த சிலம்பரசன், காதல் கொண்டேன் படத்தில் நன்றாக நடித்ததோடுமட்டுமல்லாமல், கிளைமாக்ஸ் காட்சியில் கலக்கலான ஆட்டம் போட்டுட்டீங்க என்று பாராட்டஉச்சிக் குளிர்ந்து போய்விட்டாராம் தனுஷ்.

தற்போதைய விடலை நடிகர்கள் வட்டாரத்தில் சிம்பு தான் நன்றாக டான்ஸ் ஆடுவதாக பேச்சுஉண்டு. அந்த சிம்புவே, தனது ஆட்டத்தைப் பாராட்டியதால் குஷியாகிப் போயுள்ளார் தனுஷ்.

தனுஷ் தனக்குப் போட்டியாக வந்து விட ஏகப்பட்ட வாய்ப்புக்கள் இருப்பதால், தனது அலைபடத்தில் அட்டகாசமான டான்ஸ் மூவ்மென்டுகளை வைக்குமாறு நடன இயக்குனர்களை கேட்டுக்கொண்டுள்ளாராம் சிம்பு.

சிம்புவைத் தொடர்ந்து தனுஷை நேரில் சந்தித்து ஆச்சரியம் தந்தவர் பாலு மகேந்திரா. தனுஷின்நடிப்பை வெகு நேரம் பாராட்டியதோடு, ஒரு தொகையையும் கையில் திணித்தாராம் பாலு.

எனது அடுத்த படமான இது ஒரு கனா காலம் படத்தில் நீ தான் ஹீரோ என்றாராம். பாலுமகேந்திராவே கேட்டுவிட்டால் உடனே தனுஷை நடிக்க ஒப்புக் கொள்ள சொல்லிவிட்டாராம்அவரது தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா.

துள்ளுவதோ இளமையிலும், காதல் கொண்டேனிலும் காமப் பசி கொண்ட இளைஞனாகநடித்ததால் தனது அடுத்த படத்தை ஆக்ஷன் படமாக்கிவிட்டார் தனுஷ். புது முக இயக்குனர்சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திருடா திருடி படத்தில் சண்டைக் காட்சிகளில்கலக்கி இருக்கிறாராம்.

இந்தப் படத்தில் இவருக்கு சாயா சிங், சுகி (காதலர் தற்கொலை விஷயத்தில் மாட்டியுள்ளவர்) எனஇரண்டு ஹீரோயின்கள். இந்த இருவருக்கும் இடையே ஏகப்பட்ட போட்டி. இதனால் இருவரும்ஆடை குறைப்பில் இறங்கி படத்தில் கலங்கடித்து வருகிறார்களாம்.

ஆனால், தனது முந்தைய இரு படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஏ சர்டிபிகேட்கிடைத்துவிடாமல் தடுக்க, படத்தில் கவர்ச்சியைக் குறைக்கச் சொல்லி வற்புறுத்த ஆரம்பித்துள்ளதுதனுஷ் தரப்பு என்பது தனி கதை.

அடுத்து ரிலீஸ் ஆகப் போகும் திருடா திருடியைத் தொடர்ந்து தனுஷ் கை நீட்டி அட்வான்ஸ்வாங்கியிருக்கும் 10 படங்களில் நான்குக்கு பெயரிட்டுவிட்டார்கள்.

அவற்றின் பெயர்கள்: ட்ரீம்ஸ், டாக்டர்ஸ், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (!), 18 வயசுப் புயலேஆகியவை. மற்ற படங்களுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இந்த 10 படங்களுக்கும் தலா ரூ. 60 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் தனுஷ். இனியும் கொடுக்க கால்ஷீட் இல்லைஎன்பதாலும் தனக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டுவிட்டதாலும் இப்போது தன்னைத் தேடி வரும்தயாரிப்பாளர்களிடம் ரூ. 1 கோடி கேட்கிறாராம்.

அம்மாாாாாடியேவ் !!!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil