»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் நடிக்கும் ஒரு நாள் ஒரு கனவு படத்தில் அவருக்கு ஜோடி சேரவுள்ளார் நமீதா. முத்திய நடிகர்களுடனேயேஇதுவரை ஜோடி சேர்ந்து வந்த நமீதா முதல் முறையாக இளவட்டத்துடன் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

கோர்ட், கேஸ், கால்ஷீட் சொதப்பல் என எல்லா விவகாரத்தையும் சுள்ளான் படத்தின் வெற்றி தீர்த்து விடும்,அதன் மூலம் அடுத்து வரும் படங்களின் மார்க்கெட் வேல்யூ கூடி விடும் என்று நம்பிக் கொண்டிருந்தார் தனுஷ்.ஆனால் படத்திற்கு வந்த நெகடிவ் ரிசல்ட் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தனுசுக்கு ஆக்ஷன் வேடம் பொருந்தலைப்பா, ஜாலியா பொண்ணுங்க பின்னால சுத்திக்கிட்டுருந்தவரை 10தடித்தடியான ஆட்களோடு மோதவிட்டது நல்லா இல்லைப்பா என்று தியேட்டருக்குப் போனவர்கள் எல்லாம்படத்தை வாரிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து படத்தின் இயக்குநர் ரமணா ஒரு ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார். படத்தின் தோல்விக்குநான்தான் முழுப் பொறுப்பு. தனுசின் கால்ஷீட் மொத்தமாகக் கிடைத்ததும் படத்தை சீக்கிரம் முடிக்கலாம் என்றுசூட்டிங்குக்குப் போய்விட்டேன்.

அதனால் திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தவில்லை. படம் தியேட்டரில் ரிலீஸானபோதுதான் என் தவறுபுரிந்தது என்று பெருந்தன்மையாக ஒத்துக் கொண்டுள்ளார்.

ஆனால் அடுத்தடுத்த இரண்டு தோல்விப் படங்களைத் தந்துவிட்டதால் தனுஷ் ரொம்பவும் அப்செட்.

இப்போது தன்னை இந்த சரிவிலிருந்து மீட்கக் கூடிய ஒரே நபர் தனது அண்ணன் செல்வராகவன்தான் என்றுநம்புகிறார் தனுஷ். அதனால் மற்ற படங்களுக்கு கடுக்கா கொடுத்துவிட்டு செல்வராகவன் இயக்கும் ஒரு நாள் ஒருகனவு படத்தில் மும்முரமாகியுள்ளார். இந்தப் படத்தில் நமீதா தான் ஜோடி.

மூத்த நடிகர்களுடன் மட்டுமே நடித்து வந்த நமீதா முதல் முறையாக இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரானதனுசுடன் நடிக்கிறார்.

படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு 2 மாதத்திற்கு அயர்லாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில்நடக்கவுள்ளது.

இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் தேவதையைக் கண்டேன் ஷூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார். அதன் பிறகுதான்அப்பாவின் இயக்கத்தில் உருவாகும் ட்ரீம்ஸ் படத்தை முடிக்கவுள்ளார். இந் நிலையில் தனுசுக்கு நமீதா ஜோடிசரிப்பட்டு வருமா என்ற ஆலோசனையும் நடக்கிறது.

சரி வராது என்ற முடிவுக்கு தனுஷ் தரப்பு வரும்பட்சத்தில் நமீதாவுக்கு கொஞ்சம் டிரஸ்சும் ஒத்தை டான்சும்கொடுத்துவிட்டு புது ஹீரோயினை புக் செய்வார்கள் என்று தெரிகிறது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil