சனி, ஞாயிறுகளில் இட்லி கடையை சட்னியாக்கிய காந்தாரா.. மதராஸி படத்துக்கு பக்கத்துல கூட வரலையே தனுஷ் படம்!

சென்னை: டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இன்பன் உதயநிதி ரிலீஸ் செய்த தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் காந்தாரா சாப்டர் 1 படத்தை விட முதல் 2 நாட்களில் அதிகம் வசூல் செய்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் காந்தாரா சாப்டர் 1 படம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்துக்கும் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 படத்துக்கும் இடையே பாக்ஸ் ஆபீஸில் நடைபெற்ற போட்டியில் உலகம் முழுவதும் காந்தாரா சாப்டர் 1 படத்தின் வசூல் பல மடங்கு அதிகரித்து எங்கேயோ போய்விட்டது.

Dhanush s Idli Kadai weekend box office vs Kantara Chapter 1 and Madharaasi box office comparison
Photo Credit:

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் சிறப்பான வசூல் வேட்டை நடத்தி வரும் இட்லி கடை சனி, ஞாயிறுகளில் பெரிய கலெக்‌ஷனை ஈட்டமுடியாமல் தவிக்க முழுமையான காரணமாக காந்தாரா படத்தின் ஆதிக்கம் இங்கேயும் ரசிகர்களை ஆட்கொண்டது தான் என்கின்றனர்.

மதராஸி பக்கத்துல கூட வரல: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தில் காமெடி ரோலில் நடித்த சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்து கமர்ஷியல் ஹீரோவாக உயர்த்தினார் தனுஷ். ஆனால், தற்போது தனுஷை விட அமரன் படத்தின் மூலம் 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன் மதராஸி படத்தையும் 100 கோடி கிளப்பில் சேர்த்துள்ளார். முதல் 2 நாட்களில் மதராஸி திரைப்படம் 50 கோடி வசூலை ஈட்டிய நிலையில், இதுவரை 5 நாட்கள் முடிவில் தனுஷின் இட்லி கடை திரைப்படம் ஒட்டுமொத்தமாக இந்தியளவில் 38 கோடி வசூலை மட்டுமே ஈட்டியிருப்பதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது.

Dhanush s Idli Kadai weekend box office vs Kantara Chapter 1 and Madharaasi box office comparison
Photo Credit:

மதராஸி vs இட்லி கடை கம்பேரிசன்: முதல் 3 நாட்கள் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் 62 கோடி வசூல் செய்ததாகவும் தனுஷின் இட்லி கடை வெறும் 34 கோடி மட்டுமே வசூல் செய்ததாக சினி டிராக் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மதராஸி 33.75 கோடி வசூலையும் இட்லி கடை 25 கோடி வசூலையும் ஈட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஓவர்சீஸில் இட்லி கடை 4.75 கோடி ரூபாயும் மதராஸி திரைப்படம் 18.5 கோடி வசூலையும் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

சட்னியாக்கிய காந்தாரா: 125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் முதல் 4 நாட்களில் 300 கோடி வசூலை உலகளவில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் ஈட்டியுள்ளதாகவும் இந்தியாவில் மட்டுமே 260 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் சனி, ஞாயிறுகளில் இட்லி கடைக்கு செம டஃப் கொடுத்து காந்தாரா அதிக வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல படங்கள் 100 கோடி பட்ஜெட்டுக்கும் மேல் வெளியான நிலையிலும், காந்தாரா அளவுக்கு வசூல் ஈட்ட முடியாமல் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

100 கோடி வாய்ப்பு குறைவு: தனுஷின் இட்லி கடை திரைப்படம் 100 கோடி வசூல் பெறுவது ரொம்பவே சிரமம் தான் என்கின்றனர். சனிக்கிழமை 6.25 கோடி வசூல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 6.05 கோடி என இட்லி கடை வசூல் 10 கோடி அளவுக்கு கூட உயராமல் குறைந்து விட்ட நிலையில், இந்த வாரம் மேலும், வசூல் குறையும் என்பதால் 100 கோடி வருமா என்பது டவுட்டு தான் என்கின்றனர். முதல் வார முடிவில் உலகளவில் 50 கோடி அளவுக்கு இட்லி கடை வசூல் ஈட்டியிருக்கும் என்றும் தீபாவளி வரை படம் ஓடினால் மதராஸி மற்றும் தலைவன் தலைவி படத்தை போல 100 கோடி தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டிராகன், ராயன் படங்கள் அள்ளிய 150 கோடி வசூலை தாண்ட வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X